Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மைனா

மைனா,
  • மைனா
  • வித்தார்த்
  • அமலா பால்
  • இயக்குனர்: பிரபு சாலமன்
07 நவ, 2010 - 09:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மைனா

தினமலர் விமர்சனம்

மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ. பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்! இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு. அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல... அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ... என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.

மைனா - தரமான தமிழ்ப்படம்தான் நைனா!



வாசகர் கருத்து (91)

selvam - kvp,இந்தியா
21 டிச, 2010 - 22:56 Report Abuse
 selvam யதார்த்தமான படம் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் location suppero சூப்பர் தம்பி rammaiah நடிப்பு மிகவும் அருமை
Rate this:
mohan - erode,இந்தியா
21 டிச, 2010 - 20:20 Report Abuse
 mohan சூப்பர் படம்..ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கு
Rate this:
Suresh - Theni,இந்தியா
14 டிச, 2010 - 08:26 Report Abuse
 Suresh "Very nice movie"
Rate this:
Ibrahim - tirunelveli,இந்தியா
12 டிச, 2010 - 18:25 Report Abuse
 Ibrahim kadaisiyil இருவரும் இறந்தது கஷ்டமாக irunthathu
Rate this:
Suthagar - Chennai,இந்தியா
09 டிச, 2010 - 09:49 Report Abuse
 Suthagar TV SERIAL MATHIRI IRUKKU.MOKKA PADAM
Rate this:
மேலும் 86 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மைனா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in