விமர்சனம்
ஸ்ரத்தா கபூர், ஹசீனாவாக வாழ முயற்சித்திருக்கிறார். ஆனால் அதில் அவருக்கு பாதி வெற்றி தான் கிடைத்திருக்கிறது.
இந்தியாவையே மிரட்டிய தாவுத் இப்ராஹிமின் ரோல் எப்படி இருக்க வேண்டும், அதற்கான நடிகர் எப்படி இருக்க வேண்டும். ஆனால் தாவுத் ரோலில் நடித்த சித்தார்த் கபூர், அதற்கு கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை.
ஸ்ரத்தாவின் கணவராக வரும் அங்கூர் மட்டும் அந்த ரோலுக்கும், அவரது நடிப்பும் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார்.
அபூர்வா லக்கியா இயக்குநர். ஒட்டுமொத்தமாக படத்தை பார்த்தால் அவர் தனது இயக்குநர் வேலையை சரியாக செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிகளை ஒன்றுதிரட்டி படமாக்கியிருக்கிறார். திரைக்கதை சுத்தமாக உயிரோட்டம் இல்லை. எப்போது படம் முடியும் என்று ரசிகனை கேட்க வைக்கிறது.
படத்தில் பிளஸ் என்று பார்த்தால், பஸாத் கானின் உயிரோட்டமான ஒளிப்பதிவும், சச்சின் ஜிகாரின் இதமான இசையும் தான்.
மொத்தத்தில், ஹசீனாவின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் ஹசீனா படத்தை பார்க்கலாம். அது அவர்களுக்கு திருப்தி தருமா என்பது....????















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!