விமர்சனம்
படத்தில் கிர்த்தி சனோன் தான் பிரதான பாத்திரமே. அவரை சுற்றி தான் மொத்த படமும் நகருகிறது. அதனால் தன் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார் கிர்த்தி சனோன். முந்தைய படங்களில் வெறும் கவர்ச்சி நடிகை போன்றே வலம் வந்த கிர்த்தி, இந்தப்படத்தில் கிளாமராக இல்லாமல் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.
ராஜ்குமார் ராவ், ஆயுஸ்மான் குரானா இருவரும் கிர்த்திக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றனர். இவர்களை போன்றே பங்கஜ் திரிபாதி, சீமா, ரோகித் சவுத்ரி உள்ளிட்டோரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
நில் பட்டே சனாட்டா படத்தை தொடர்ந்து அஸ்வினி ஐயர் திவாரி இயக்கும் இரண்டாவது படம் இது. ஒரு அழகிய காதல் கதையை, சென்ட்டிமென்ட்டாக சிறப்பாக இயக்கியிருக்கிறார். அவருக்கு பக்க பலமாக திரைக்கதை, ஒளிப்பதிவு, பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதேசமயம் படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்பதை முன்கூட்டியே அறிவது பலவீனம். மற்றபடி, பரேலி கி பார்பி படத்தை அனைவரும் சென்று பார்க்கலாம், ரசிக்கலாம்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!