விமர்சனம்
அக்ஷ்ய் குமாரின் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறி கொண்டே செல்கிறது. சமீபத்திய இவரது ஒவ்வொரு படங்களும் அவ்வளவு அருமையாக வந்ததை போன்று டாய்லெட் படத்திலும் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார்.
நடிப்பில் அக்ஷ்ய் குமாருக்கு துளியும் சளைத்தவர் அல்ல என்று போட்டி போட்டுக் கொண்டு நடித்து அசத்தியிருக்கிறார் பூமி. இது இவரின் இரண்டாவது படமா என கேட்கும் அளவுக்கு இருப்பது தான் சிறப்பு.
அக்ஷ்ய், பூமியை போன்றே சுதிர் பாண்டே, திவேந்து சர்மா உள்ளிட்ட படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீ நாராயண் சிங், டாய்லெட் படத்தை இயக்கியிருக்கிறார். சந்தேகமே வேண்டாம், அவ்வளவு அருமையாக படத்தை இயக்கியுள்ளார். ஒரு சீரியஸான சப்ஜெக்ட்டை எப்படி சொன்னால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நன்கு அறித்து, அதை காமெடியாகவும், அதேசமயம் சிந்திக்க வைக்கும்படியும் சொல்லி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முற்பாதி நிறைய காமெடிகளுடன் விறுவிறுப்பாக செல்கிறது. பிற்பாதி கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.
டாய்லெட் ஒளிப்பதிவு, வசனம் உள்ளிட்டவைகளும் கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. அதேசமயம், ஹேன்ஸ் மேட் பகலி பாடலை தவிர மற்ற பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லாதது குறையாக தெரிகிறது.
ஒரு வீட்டிற்கு டிவி, பேன், போன் போன்றவைகளை விட கழிப்பறை தான் முக்கியம், சுத்தம் அவசியம் என உரக்க சொல்லி வெளிவந்திருக்கும் டாய்லெட் ஏக் பிரேம் கதா பாராட்டுதலுக்குரியது.
மொத்தத்தில், டாய்லெட் ஏக் பிரேம் கதா - சுத்தம் பிளஸ் தரம்!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!