விமர்சனம்
இப்படி ஒரு அழகான கருவை , கதையை எத்தனைக்கு எத்தனை ஆபாசமாகத்தர முடியுமோ அத்தனைக்கு அத்தனை ஆபாசமாக காண்போர் முகம் சுழிக்கும் படி சதந்திருக்கிறார் இயக்குனர்
கருப்பைய்யா முருகன்.
படத்தில் இளம் பெண்ணாக இடம்பெறும் அர்ச்சனா சிங் , நான் கடவுள் ராஜேந்திரன் , வழக்கு எண் முத்துராமன், மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி ,சுவாமிநாதன் , மிப்பு , தாரிகா உள்ளிட்ட எல்லோரும் இயக்குனர் எதிர்பார்ப்பிற்கு மேலாகவே நடித்திருக்கிறார்கள். அது பலமா ? பலவீனமா .? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும் .
படத் தொகுப்பாளர் சி.கணேஷ்குமாரின் கத்திரி இப்பட எடிட்டிங் வேலையின் போது காணாமல் போய்விட்டது போல் தெரிகிறது! பாவம் , அது வேலை செய்திருந்தால் படமே காணாமல் போயிருக்கும் என அதை அவர் ,காணாது அடித்திருப்பார் போலும் . எஸ் .மோகனின் ஒளிப்பதிவு சபாஷ் சொல்லும் அளவிற்கு இல்லை. மற்றபடி ., இசைஞர்தாஜ்நூரின் இசை பெரிய விசையாக இல்லாவிடினும் படத்திற்கு ஒரளவு வலு சேர்த்திருப்பது ஆறுதல் . .
காமெடி எனும் பெயரில் காம நெடியாக படம் நெடுக டபுள் மீனிங் வசனங்கள் பரவி விரவிக் கிடப்பது அபத்தம். மேலும் ., அபலைப் பெண்ணின் வாழ்க்கை அவலங்களை பதிவு செய்கிறேன் பேர்வழி ... என திரைக்கதையிலும் , காட்சிப்படுத்தலிலும் எக்கச்சக்கமாய் தடுமாறி ரசிகனை ஏகத்துக்கும் அலைகழித்து ஆத்திரப்பட வைக்கிறார் இயக்குனர் கருப்பைய்யா முருகன். அவர் நினைத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.
இவை எல்லாவற்றுக் டும் மேல் .,இப்படக் க்ளைமாக்ஸ் ., - மூன்று பெரிய மனிதர்களால் .,பூனை மேல் சவாரியாக முடிவது கொடூரம்!
ஆக மொத்தத்தில் யானை மேல் குதிரை சவாரி - ஒடும் திரையரங்கிற்கு ரசிகர்கள் போனால் சரி!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!