Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஷாஜகானும் பரீக்குட்டியும் (மலையாளம்)

ஷாஜகானும் பரீக்குட்டியும் (மலையாளம்),Shajahanum Pareekuttiyum
  • ஷாஜகானும் பரீக்குட்டியும் (மலையாளம்)
  • குஞ்சாக்கோ போபன்
  • அமலா பால்
  • இயக்குனர்:
29 ஜூலை, 2016 - 14:23 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஷாஜகானும் பரீக்குட்டியும் (மலையாளம்)

ஷாஜகானும் பரீக்குட்டியும் (மலையாளம்) - விமர்சனம்

நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, அமலாபால், நிக்கி கல்ராணி (சிறப்பு தோற்றம்), அஜு வர்கீஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, லட்சுமி கோபால்சாமி, லேனா மற்றும் பலர்

இசை : கோபிசுந்தர்

ஒளிப்பதிவு : அனீஷ்லால்

கதை : ஒய்.வி.ராஜேஷ

இயக்கம் : போபன் சாமுவேல்.

ரிட்டையர்டு மிலிட்டரி அதிகாரி விஜயராகவனின் மகள் அமலாபால். ஒரு விபத்தில் சிக்கிய அமலாபாலுக்கு குத்துமதிப்பாக இரண்டு வருடங்களாக நடந்தவை மட்டும் மறந்துபோகிறது. தனது நண்பரின் மகனான மிலிட்டரியில் வேலை பார்க்கும் அஜூ வர்கீஸை அமலாபாலுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார் அவரது தந்தை. ஆனால் அவரை திருமணம் செய்ய அமலாபாலுக்கு விருப்பம் இல்லை.

இந்தநிலையில் கோடீஸ்வரர் குஞ்சாக்கோ போபனும், லோக்கல் ரவுடியான ஜெயசூர்யாவும் அமலாபால் விபத்தில் சிக்குவதற்கு முன்பாக தங்களை காதலித்ததாக தனித்தனியே கதை சொல்கின்றனர். அதற்கான ஆதாரங்களையும் காட்டுகின்றனர்.. இதனால் யார் சொல்வது உண்மை என தெரியாமல் குழம்பும் அமலாபால் தனக்கு ஞாபகமறதி தாக்கவில்லை என்றும் தந்தை பார்த்த மாப்பிள்ளையை பிடிக்காததால் நாடகம் ஆடியதாகவும் திடீரென ஒரு குண்டை தூக்கிப்போடுகிறார்.

இதனால் குஞ்சாக்கோ போபன் மற்றும் ஜெயசூர்யாவின் இருவரின் உண்மை முகமும் அவர்கள் ஏன் அமலாபாலை காதலித்ததாக சொன்னார்கள் என்கிற உண்மையும் தெரியவருகிறது.. இருவரும் காதல் நாடகம் ஆடியது ஏன்..? அமலாபால் என்ன செய்தார் என்பதை கிளைமாக்ஸில் சின்னச்சின்ன ட்விஸ்ட்கள் வைத்து சொல்லி முடிக்கிறார்கள்.

மெமரி லாஸ் என்பதை வைத்து இதுவரை பல படங்கள் வந்துவிட்டாலும், இது கொஞ்சம் புதுசு தான். அமலாபாலின் ஞாபகமறதியை பயன்படுத்தி குஞ்சாக்கோவும், ஜெயசூர்யாவும் ஆட்டும் காதல் நாடகம், அட இப்படி ஒரு ரூட் கூட இருக்க என ஆச்சர்யப்பட வைக்கிறது. அதிலும் தளபதி படத்தை வைத்து தனது காதல் கதையை அவிழ்த்து விடும் ஜெயசூர்யாவின் கதாபாத்திரம் சிறப்பு. குஞ்சாக்கோ போபன் வழக்கம்போல..

மிதமான கவர்ச்சி, மீடியமான ரொமான்ஸ் என எல்லைக்கோடு தாண்டாமல் நடித்திருக்கிறார் அமலாபால். ஞாபக மறதியால் அவர் காதல் தொந்தரவுகளை சந்திக்கும் காட்சிகளை விட கூடவே இருந்து கல்யாண தொந்தரவு தரும் அஜூ வர்கீஸை அவர் சமாளிக்கும் விதம் அருமை..

காட்சிகளை ஹீரோக்கள் இருவருமே கலகலப்பாக நகர்த்தினாலும் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் அஜூ வர்கீஸ் இருவரின் காமெடிக்காட்சிகள் முக்கால்வாசி சிரிப்பு ரகம் தான். குஞ்சாக்கோ, ஜெயசூர்யா போல அஜூ வர்கீஸும் தனது பங்கிற்கு கதைவிட்டு மாட்டிக்கொள்வது செம கலாட்டா. டிடெக்டிவாக சுராஜ் பண்ணும் அலப்பறை சூப்பர்.. கிளைமாக்சில் கெஸ்ட் ரோலில் வரும் நிக்கி கல்ராணியை பற்றி என்ன சொல்வது.?

கதையாக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் மொத்தத்தில் இது பொழுதுபோக்கும் அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை.




வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in