விமர்சனம்
ஆனால், இரண்டாம் பாதியை காப்பாற்ற வேண்டிய அறிமுக நாயகி அஸ்வினி மோகன், ஏனோ தானோ என்று ஏதோ வந்து போவதும் சிறுமி போன்ற தோற்றத்தில் இருப்பதால் கிளாமருக்கும் உதவாமல் இருப்பதும் உறுத்தல்.
வினோத், ராதா, காயத்ரி, சிந்து, மயில்சாமி உள்ளிட்டவர்களில் மயிலு, வழக்கம் போலவே, காதலுக்கு வலிய உதவுகிறார். என யோசிக்கும் போதே கொட்டாவி வருகிறது. ஆவ்... வ்...வ்!
சிவா யாதவின் கலை இயக்கத்தில் சொல்லிக் கொள்ளும் படி எதுவுமில்லை, சுரேஷ் அரஸின், படத்தொகுப்பு படத்தில் இருக்கிறதா? எனும் கேள்வியே எழுகிறது. சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் கொள்ளை அழகு. மற்றவை..?
நாகாவின் இசையில் கரிச்சானுக்கு காதலிக்க பொண்ணு ஒன்று வேணுமப்பா.., முதல் முறை நெஞ்சில் காதல்..., என் மீது சாய்கிறதே..., ஏன் உன்னை கண்டேன் என்று.... உள்ளிட்ட பாடல்கள் எங்கோ கேட்ட குரல், ப்ளஸ் பாடல்கள் என்றாலும் ஆறுதல்!
புதியவர் வெங்கட்.சி.சாமியின் எழுத்து இயக்கத்தில் வந்திருக்கும் முழு நீள, நீள.. நீள.... காதல் படமான இதில், யோசிக்கிறதைப் பத்தி இனிமே யோசிக்க முடியாது பாஸ்..., பொண்ணுங்களை எட்ட இருந்து பார்க்கிறதுல எந்த பிராபளமும் இல்ல.. கிட்ட போறப்போ தான் பயமே... உள்ளிட்ட வசன பன்ச்கள் ரசனை. ஆனால், அவை நாடக பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம், ரன வேதனை.
மொத்தத்தில், கண்டேன் காதல் கொண்டேன் திரைப்படத்தை காணலாம் காதல் கொள்ளலாமா..? என்பது ரசிகனின் சாய்ஸ்!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!