விமர்சனம்
---------------------------------------
குமுதம் விமர்சனம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது வாகா படம். ஆனால் கதை சப்.
அப்பாவின் மளிகைக் கடை வேலையிலிருந்து தப்பிப்பதற்காக, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் விக்ரம்பிரபு சேர்வதும், எல்லையில் நடந்த கலவரத்தில் காதலியைக் காப்பாற்றி பாகிஸ்தானுக்கே கொண்டு போய் விடுவதும், திரும்பி வரும்போது பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்குவதும், அதிலிருந்து விடுபடுவதுமாக கதை நகர்கிறது.
எல்லைப் பாதுகாப்புப்படை வீரருக்கு விக்ரம்பிரபு பொருந்துகிறார். அந்தத் தனிமை, வெறுமை இயற்கையானது. அந்தக் காதலுக்கும், பாகிஸ்தான் வீரர்களுடன் மோதுவதற்கும் முகபாவனை ஒரே மாதிரி ஏன்?
அறிமுகம் ரன்யாராவ் அசல் பாகிஸ்தானிப் பெண்ணாக தன் காதல் கடமையை சரியாகச் செய்திருக்கிறார்.
கருணாஸ், சத்யன், அஜய்ரத்னம், துளசி, வித்யூலேகா என்று பலர் வந்து போகிறார்கள்.
படத்தின் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு. எல்லைக் காட்சிகள், மலைகள், காடுகள், எல்லை வேலிகள், என்று அத்தனையும் தத்ரூபம். பின்னணி இசை கொஞ்சம் கைகொடுக்கிறது.
நான் பாகிஸ்தானிப் பெண்ணை காதலிக்கவில்லை. நான் காதலிக்கும் பெண் பாகிஸ்தான் போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.
தீவிரவாதம் எல்லை பிரச்னை. காஷ்மீர் என்று கவன ஈர்ப்புக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும், விக்ரம் பிரபுவும் சரி, இயக்குநரும் சரி அந்த தீவிரத்தன்மையை உணராமல் இருப்பது அபத்தம், கிளைமாக்ஸில் வில்லனைக் கொல்லாமல் மனம் திருந்தச் சொல்லி வசனம் பேசுவது கொடுமையிலும் கொடுமை.
வாகா : பலவீனம்
குமுதம் ரேட்டிங்: சுமார்






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!