விமர்சனம்
--------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
படிப்பில், கோட்டைவிடும் மகளை, நன்றாகப் படிக்க வைக்க, அம்மாவும் அதே பள்ளியில் அதே வகுப்பில் சேர்ந்து படித்தால் எப்படி இருக்கும்?அதைத்தான் அம்மா கணக்கு என்று போட்டுப் பார்த்திருக்கிறார்கள். கணக்கு சரி, விடையும் சரி, ஆனால், ரீமேக் வாசனை நெருடல்.
அமலாபால் டாக்டர் ரேவதி வீட்டில் மகளுக்காக வேலைக்காரியாக செயல்படுவதும், கணவன் இல்லாமல் சேரியில் 14 வயது மகளுக்குத் தாயாக கடமையாற்றுவதும், மகளுக்கு படிப்பு சொல்லித்தர, தானும் மகள் படிக்கும் வகுப்பில் சேர்ந்து படிப்பதும், தன் நடத்தையை மகளே சந்தேகப்படும்போது அமலாபால் நடிப்புக்குத் தீனி போடுகிறார். என்றாலும் அந்த இளமை கொஞ்சமும் ஒட்டாத தன்மை.
அபிநயாவாக வரும் யுவஸ்ரீ டாக்டர் மகள் டாக்டர். இன்ஜினியர் மகள் இன்ஜினியர். வேலைக்காரி மகள் வேலைக்காரிதானே என்ற சின்னவயது கோபமும் அலட்சியமும் டாப்.
டாக்டராக வரும் ரேவதியும் வாத்தியாராக வரும் சமுத்திர கனியும் பாந்தமான நடிப்பு.
சேரி, மீன்கடை என்று கலை இயக்குநர் உழைத்திருக்கிறார். அனாவசிய திணிப்புகள் எதுவும் இல்லாத பின்னணி இசை. ராஜா ராஜாதான்.
கதாசிரியரின் கற்பனைக்கு ஒரு பாராட்டு. ஆனால் இந்தியாவில் மகள் வகுப்பில் தாய் சாத்தியமே இல்லை. கல்வியின் தரத்தை கணிதம் பற்றி அறியாமையை சொல்லி விளக்குவது சபாஷ். அதுவும் பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர். திரைக்கதையில் அழுத்தம் காட்டியிரந்தால் அம்மா கணக்கு தப்பாயிரக்காது.
அம்மா கணக்கு: மகள்களுக்குப் பாடம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!