Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தமாஷா (இந்தி)

தமாஷா (இந்தி),Tamasha
  • தமாஷா (இந்தி)
  • ரன்பீர் கபூர்
  • தீபிகா படுகோனே
  • இயக்குனர்: இம்தியாஸ் அலி
28 நவ, 2015 - 15:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தமாஷா (இந்தி)

இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியிருக்கும் ரொமான்ட்டிக் படம் ''தமாஷா''. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என் இனி பார்ப்போம்...


கதைப்படி, பிரான்ஸில் வெட் வர்தன் சானி எனும் ஹீரோ ரன்பீர் கபூரும், தாரா மகேஷ்வரி எனும் ஹீரோயின் தீபிகா படுகோனேவும் சந்திக்கிறார்கள். தங்களது உண்மையான அடையாளத்தை மறைக்க இருவரும் இனி சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்து இந்தியா திரும்புகிறார்கள். தீபிகா தனது சொந்த ஊரான கோல்கட்டாவிற்கும், வெட் டில்லிக்கும் திரும்புகிறார். ஒருசமயம் வேலை சம்பந்தமாக தாரா டில்லி வருகிறார். அங்கு ரன்பீரை சந்திக்கிறார். ரன்பீர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் மேனேஜராக உள்ளார். அதன்பின்னர் இருவருது நட்பும் தொடர்கிறது. நட்பு காதலாக கசிந்துருகி, தீபிகாவிடம் தன் காதலை ரன்பீர் சொல்ல முற்படும்போது, பிரான்ஸில் நான் பார்த்த 'வெட்' நீயில்லை என்று சொல்லி அந்த காதலை மறுக்கிறார் தீபிகா. ரன்வீர் காதலை தீபிகா வெறுக்க காரணம் என்ன, பிரான்சில் அப்படி எப்படி இருந்தார் ரன்பீர், ரன்பீர்-தீபிகா காதல் கைகூடியதா.? என்பதை அறிய தியேட்டரில் சென்று படத்தை பாருங்கள்.


ரன்பீரின் சினிமா கேரியரில் தமாஷா படம் ஒரு சிறந்த படம் என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார் ரன்பீர்.


ரன்பீரை போன்று தீபிகாவும் நடிப்பில் எந்த குறையும் சொல்லாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரை போலவே படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


படத்தில் ஒரு கதாசிரியராக இயக்குநர் இம்தியாஸ் அலி வெற்றி பெற்றிருக்கிறார், ஆனால் ஒரு இயக்குநராக அவ்வாறு செய்ய தவறிவிட்டார். படத்தில் மிகவும் பொழுதுபோக்காக சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குநர், ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். படத்தின் பாடல்கள், இசை, ஒளிப்பதிவு எல்லாம் பிரமாதம்.


தமாஷா படத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. ரன்பீர் - தீபிகா இடையேயான கெமிஸ்ட்ரிக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்.


மொத்தத்தில், ''தமாஷா'' - 'தமாசு'

ரேட்டிங் - 2/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in