விமர்சனம்
ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினத்தின் ஓவியப்பதிவான ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம். டி.இமானின் இசையில், லவ் மா லவ் மா.... ஜெஸ்ட் பீம பீம.... உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ரக ராகம். பிரவீன் ஆன்டனியின் படத்தொகுப்பு, கொஞ்சம் பாடாவதி தொகுப்பு என்பது சலிப்பு!
டி.சிவக்குமாரின் கதையில் ஏற்கனவே சொன்னது போன்று கே.எஸ்.ரவிக்குமாரின் வில்லன் படக்கதை உள்ளிட்ட வேறு பழையபடங்களின் சாயலே பெரிதாக தெரிகிறது. இந்தக் குறை கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை, இயக்கத்திலும் பிரதிபலித்திருப்பது சற்றே நெருடல்.
ஆக மொத்தத்தில், ரசிகனுக்கு முடிஞ்சா இவன புடி - எந்தப் பழைய படம் என கண்டுபிடி? என சவால் விடும் ரீதியில் இருக்கிறது!
--------------------------------------------------
குமுதம் விமர்சனம்
தல அஜித் இரட்டை வேடங்களில் நடித்து கே.எஸ் ரவிக்குமா இயக்கிய வில்லன் பரபர திரைப்படத்தை லேசாக நினைவுபடுத்தி இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்து, ஸ்ட்ராங்காகத் தந்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.
கதை என்ன?
வி.ஐ.பி.க்களின் கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் சுதீப். பின்னர் மாட்டிக் கொள்ளும்போது நான் அவன் இல்லை, அது தன் சகோதரன் என்று நம்ப வைத்து எஸ் ஆகிறார். நிலம் வாங்க வந்த நித்யாமேனனுடன் காதல் ஏற்படுகிறது. நித்யாவுக்குத் தன் காதலன் மேல் சந்தேகம் வர, இருவரும் இணைந்தார்களா? கறுப்புப் பணம் மீட்கப்பட்டதா என்பதுதான் கதை.
கொஞ்ச நேரம் பூனை, கொஞ்ச நேரம் புலி என்று செமை ஃபீல் கொடுக்கிறார் சுதீப். கன்னட சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா?
நித்யா மேனன். நா. முத்துக்குமாரின் காதல் கவிதை போல் இருக்கிறார்!
நாசர், பிரகாஷ்ராஜ் பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?
ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு மேலும் விறுவிறுப்பைத் தருகிறது. பாடலை விட பின்னணி இசையில் இமான் முன்னணி.
சதீஸ் எப்போதாவது சிரிக்க வைக்கிறார். சும்மா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக செல்ல ஒரு படம் இது.
முடிஞ்சா இவன புடி(க்கும்)
குமுதம் ரேட்டிங் : ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!