விமர்சனம்
------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
தவறான முறையில் பிறந்து வளர்ந்த ஒருவனை இந்த உலகம் எப்படிப் பார்க்கும் என்பதை கருப்பு உலகத்தின் பின்னணியோடு வெளிச்சம் போட்டுக் காட்டும் படம். அப்படிப் பிறந்த ஒருவன் இந்த சமூகத்தை எப்படி பழிவாங்குகிறான் என்பதுதான் கதை.
பாலியல் தொழிலாளியாக்கப்படும் ஒரு இளம்பெண்ணிற்கு மகனாகப் பிறக்கும் விக்ராந்த், பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். தன் கண்முன்னே தன் தாய்க்கு நடக்கும் கொடுமைகளையும், தாய் கொலை செய்யப்படுவதையும் கண்டு கொதிக்கும் இடங்கள் டாப். நண்பனின் மனைவியைக் காக்க அவர் போராடும் இடங்கள், ஆக்ஷனில் ஸ்கோர் செய்கிறார்.
விக்ராந்தின் நண்பனாக வரும் அரவிந்த் இன்னொரு அனாதை. சென்னைக்கு ஓடிவந்த சிறுவன் விக்ராந்தை ஆதரிப்பதும், நண்பனைக் காட்டிக் கொடுக்காமல் உயிரை விடுவதும் மனதைத் தொடும் நடிப்பு.
லீமா, அபிநயா என இரு நாயகிகள். லீமா விக்ராந்துக்கு ஜோடி என்றாலும் பெரிதாக வாய்ப்பு இல்லை. அரவிந்துக்கு ஜோடியாக வரும் அபிநயா தனது அசால்ட்டான நடிப்பால் நிற்கிறார்.
ராகுல் வெங்கட், அருள்தாஸ், போஸ் வெங்கட் ஆகியோரின் வில்லத்தனம் டபுள் ஓகே. மாமாத்தனம் எரிச்சல்.
விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் பங்குபெரும் தாக்க.... தாக்க பாடல் படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையும் பெரிய ப்ளஸ்.
சிறு வயதில் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிச் சீரழிக்கும் கும்பலின் கருப்பு உலகத்தை யதார்த்தமாகக் காட்டி, மனசைப் பிசைய வைக்கிறார் இயக்குநர். ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று படத்திற்கு விறுவிறுப்பு ஊட்டி பாஸ் ஆகிறார் இயக்குநர் சஞ்சீவ்.
தாக்க... தாக்க...: ரசிகர்ளின் மனதைத் தாக்கும்.
குமுதம் ரேட்டில்: ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!