விமர்சனம்
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஹீரோயிசம், பஞ்ச் டயலாக், காமெடி நண்பன் என்ற தமிழ் சினிமாவின் இலக்கணத்தையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு வித்தியாசமாய், ஒரு சினிமா.
மலையாளத்தில் ஹிட் அடித்த படத்தை தமிழு்குத் தந்திருக்கிறார்கள். ஆர்யா, சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் சொந்தக்காரர்கள். அவர்களின் சின்ன வயது நிறைவேறாத ஆசை பெங்களூரில் போய் லூட்டி அடிக்க வேண்டும் என்பது.
ஸ்ரீதிவ்யா கல்யாணமாகி பெங்களூர் செல்ல, ஆர்யா, சிம்ஹாவும் அங்கே போக, ஆளாளுக்கு ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அதனை எப்படி வெற்றிகரமாக உற்சாகமாக கடக்கிறார்கள் என்பதுதான் பெங்களூர் நாட்கள்.
வழக்கம்போல் விளையாட்டு பையனாக ஆர்யா. கணவனுக்கு என் பிரச்னை என்று புரிபடாத ஸ்ரீதிவ்யா, காதல் என்று நினைத்து ஏமாந்து போகும் சிம்ஹா.
இறக்கமாக இருந்து காரணம் புரிந்ததும், மனதைக் கவ்வும் ராணா, உற்சாகமான சமந்தா, காதலுக்கும் பாசத்துக்கும் இடையில் தவிக்கும் பார்வதி, கோபத்தையும் இயலாமையையும் ஒரு சேர வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜ் என்று மேக்கப் கூட இல்லாமல் இயல்பாக இருக்கிறார்கள். அனைவருமே, இயக்கம் பொம்மரில்லு பாஸ்கர்.
கிராமத்தில் புழுங்கித் தவிக்கும் அம்மாக்காரி நகரத்துக்கு வந்தால் எப்படியெல்லாம் இருப்பார என்பதை சரண்யாவுக்கு நிகராக யாராவது செய்துவிட முடியுமா? பொன்வண்ணன் வீட்டுக்குச் செல்லும் போது ஒரு திருஷ்டிப் பூசணிக்காயை வாங்கிச் செல்லவும்!
குகனின் கேமரா பெங்களூரைச் சுற்றிக் காட்டுகிறது. பாடல்கள் அன்னியத் தன்மை.
பெங்களூர் நாட்கள் - புதுசு!
குமுதம் ரேட்டிங் - ஓ.கே.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!