ரன்பீர் கபூர், அர்ஜூன் ராம்பால், ஜாக்குலின் பெர்னான்டஸ்
டைரக்டர் : விக்ரம்ஜித் சிங்
தயாரிப்பாளர் : பூஷன் குமார், திவ்யா கோஸ்லா குமார், கிருஷ்ணகுமார், ப்ரீவே பிக்சர்ஸ்
ரன்பீர் கபூர், அர்ஜூன் ராம்பால், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்துள்ள ராய் படம் குறித்து காண்போம்
வெற்றி இயக்குநரான கபீர் (அர்ஜூன் ராம்பால்), தனது படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதைத்தேடலில் தீவிரமாக இருக்கிறார். அப்போது முன்னணி தயாரிப்பாளரான ஆயிஷாவை (ஜாக்குலின் பெர்னான்டஸ்) சந்தி்க்கிறார். ஆயிஷாவிடம் கலந்துரையாடியதில் சில மாற்றங்களை மேற்கொண்டு, தனது படத்திற்கான கதையை, கபீர் உருவாக்குகிறார். ராய் (ரன்பீர் கபூர்), தியா (ஜாக்குலின் பெர்னான்டஸ்) இவர்களுக்கிடையேயாவ ரொமான்ஸ் கலந்த உண்மை வாழ்க்கையை, படமாக்க கபீர் திட்டமிடுகிறார். இந்த படத்தை, கபீர் நிறைவு செய்தாரா? ராய் என்பவர் யார்? என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
ராய் படத்தின் மூலம், விக்ரம்ஜித் சிங் , இயக்குநகராக அறிமுகமாகியுள்ளார். படத்தை புதிய லொகேசன்களில், ஸ்டைலிஷ்ஷாக தர, விக்ரம்ஜித் சிங் முயன்றிருக்கிறார். ஆனால், அவரின் கதை சொல்லும் விதமும், காட்சியமைப்பும் மக்களிடம் எடுபடவில்லை. படத்தை 10 நிமிடங்கள் பார்த்தாலே, அடுத்த 20வது நிமிடத்தில் இதுதான் நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, 10 நிமிடம் குட்டித்தூக்கமே போட்டுவிடலாம் அந்தளவிற்கு இருக்கிறது இயக்குநரின் படைப்பு. படத்தின் இசை, சற்று ஆறுதலளிக்கிறது. படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்றபோதும், படத்தின் இறுதியில், பார்வையாளர்களுக்கு பிடித்தவையாக, பாடல்கள் மட்டுமே உள்ளன. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. மலேசியாவின் பல முக்கிய இடங்களை, ஒளிப்பதிவாளர், நம் கண்களுக்கு விருந்தாக படைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டவிதத்தில் தெளிவு இல்லை.
ராய், ரன்பீர் கபூர் படம் என்று சொல்வதைவிட, அர்ஜூன் ராம்பால் படம் என்று சொல்வதே சரியானது. அர்ஜூன் ராம்பால், சிறப்பாக நடித்துள்ளார். ஜாக்குலின் பெர்னான்டஸ், இந்த படத்தில், இரட்டை வேடங்களில் நடித்திருந்தபோதிலும், இரு கேரக்டர்களிலும், ஒரேவித எக்ஸ்பிரஸ்களையே காட்டுவதால், பார்வையாளர்களுடன் ஜாக்குலின் கேரக்டர் ஒன்றவில்லை என்று சொல்லலாம். ஆனால், ஜாக்குலின் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும், அவரின் உடை மற்றும் கிளாமர் அனைவரையும் கிறங்கடிக்க வைக்கிறது. மற்ற கேரக்டர்களின் நடிப்பு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை
இந்த படத்தை பார்த்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்...
ரேட்டிங் : 2/5