விமர்சனம்
-------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
இவள் இல்லைன்னா இன்னொருத்தி! என்று காதலில் தோற்ற இளைஞர்களுக்கு ஆறுதலாக பல பலான விஷயங்களோடு சொல்லித்தரும் படம்.
ஜி.வி பிரகாஷ் முதலில் கயல் ஆனந்தியை லவ்வுகிறார். கூடவே தப்பு செய்யவும் முயற்சிக்கிறார். இது பள்ளி முழுவதும் தெரியவர, காதல் டமால் ஆகிறது. உடனே மனிஷா யாதவ் வலிய வந்து காதலிக்கிறார். மனிஷா நிறைய சரக்கடிக்கிறார். அட்வைஸ் பண்ணப்போய் இவர்கள் காதலும் டமால் ஆகிறது.
சோகத்தை மறைக்க சித்தப்பா விடிவி கணேஷ் ஒயின்ஷாப் வைத்திருக்கும் கும்பகோணம் போய் குடிக்கிறார். அங்கே முன்னாள் காதலி கயல் ஆனந்தியை சந்திக்கிறார். விடிவி கணேஷின் ஆலோசனையில் ஆன்ட்டி சிம்ரன் உதவியுடன் ஆனந்தியை மீண்டும் லவ்வுகிறார். கிளைமாக்ஸில், ஆனந்தி, சூர்யாவுடன் ஒரே ஒரு நாள் மேட்டர் வைத்துக் கொண்டதாக சொல்ல, காதல் கந்தலாகிறது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பு, டான்ஸ், வசனம் என்று இளைஞர்களை நிறையவே கை தட்ட வைக்கிறார். பாடல்களில் ஆட்டம் போட வைக்கிறார்.
முதல் நாயகி கயல் ஆனந்தி கண்களால் காதல் பேசி கவர்கிறார். சரக்கடிச்சாதாண்டா பசங்களுக்கு தைரியம் வரும் என்ற புனிதமான வசனங்கள் எல்லாம் பேசி கிறங்கடிக்கிறார்
நடிக்கவும் செய்கிறார் மனிஷா யாதவ், கவர்ச்சி கலக்கல். ஆண்கள் சரக்கடித்துவிட்டு தன்னிடம் தப்பு செய்ய கூடாது என்பதை இவர் கூறும் விளக்கத்தால் தியேட்டரில் விசில் பறக்கிறது.
இன்றைய ஆண் - பெண் இளைஞ்களின் மனநிலையை புட்டுப்புட்டு வைக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இளைஞர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு கூடுதலாக பலான விஷயங்களை சேர்த்து விருந்தே கொடுத்திருக்கிறார். படத்தில் எங்கேயும் ஆடை அவிழ்ப்புக் காட்சிகள் இல்லை. ஆனால் வசனங்களால் எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டு விடுகிறார்கள்.
தி.இ.ந. : காதல் - சரக்கு - மேட்டர் கலந்த கலவை.
குமுதம் ரேட்டிங்: அபத்தம்














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!