Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அட்டி

அட்டி,Atti
இயக்குநர் சுராஜின் உதவியாளர் விஜயபாஸ்கர் இயக்கும் படம் அட்டி.
06 ஜூலை, 2016 - 11:09 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » அட்டி

சிவகார்த்திகேயன் விட்டுவிட்டு வந்த சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மா.கா.பா ஆனந்த் பெரிய திரையில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாது ஹீரோவாக நடித்தார். இப்போது அட்டி என்ற பெயரில் தயாராகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். அர்ஜூன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி பாபு இசை அமைக்கிறார்.


இயக்குனர் சுராஜிடம், அலெக்ஸ் பாண்டியன், மாப்பிள்ளை படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜயபாஸ்கர் இயக்குகிறார். "சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் நண்பர்கள் சிலர் இணைந்து மினரல் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஆனந்துக்கு வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்பதும்தான் கதை. முழு படமும் ஐஸ்ஹவுஸ் பகுதியில் படமாக்கப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கு மட்டும் அவுட்டோர் செல்ல திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் விஜய் பாஸ்கர்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in