விமர்சனம்
மாத்தியூவாக மத கோட்பாடுகளுக்கு மாறாக ஆவி ஓட்டுகிறேன், ஆன்மாவுடன் பேசுகிறேன்., பேய், பிசாசுகளை விரட்டுகிறேன....பேர்வழி.. என அவைகளாலேயே அழியும் மைம் கோபியின் நடிப்பு பலம்.
சிவாவாக பூஜாவின் சிங்கப்பூர் புருஷனாக வந்து தன் குழந்தை அபியை சென்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிட்டு தவிக்கும் குணாலன் மோகனும் பெருந்தன்மையான நடிப்பில் பிரகாசித்துள்ளார்.
ஜீ.டி-மோர்ணா அனிதாவும் உயிரை கொடுத்து நடித்து உருக்குகிறார் நம்மை .!
எம். ஆர்.கே.வின் அமானுஷ்யம் நிரம்பிய லாஜிக்கான திகில் கதை, மணீஷ் மூர்த்தியின் ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவு, சிவசரவணனின் பீதியை கிளப்பும் பின்னணி இசை, ஹரிஹரனின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளும்., ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் திறமையான எழுத்து, இயக்கமும், உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் மூலம் ரசிகனுக்கு என்ன வேணும் ? என்பதை ஒரளவு உணர்ந்து சரியாக பூர்த்தி செயதிருப்பது இனிமை!
ஆக மொத்தத்தில், குழந்தை டெய்சியை அனாதை ஆசிரமத்தில் இருந்து குழந்தையில்லா சோகத்தில் மனநலம் பாதித்த பெண் ஜீ டி திருட உதவி தகவல் சொல்லும் ஆசிரம ஆயாவை டெய்சி ஆவிப் பேய் எதுவும் செய்யாமல் விடுவது ... உள்ளிட்ட குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உனக்கென்ன வேணும் சொல்லு நிச்சயம் ரசிகனுக்கு பிடிக்குமுன்னு சொல்லலாம்!!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!