விமர்சனம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆர்.கே.பரசுராம்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்....ஓவினாம் (வியட்நாம் நாட்டை பூர்விகமாக கொண்ட தற்காப்பு கலை ) கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் ஒன்று.
இந்த தற்காப்பு கலையை கற்று கொடுக்கும் மாஸ்டராக வரும் நாயகனுக்கும், நாயகி சனம் ஷெட்டிக்கும் காதல் இவர்கள் காதலுக்கு ஒரு பிரச்னை வருகிறது. நாயகியின் பெற்றோரால் அது மேலும் பெரிதாகிறது.இதற்கிடையில் நாயகி கொல்லப்படுகிறாள். கொலை செய்யப்பட்ட தன் காதலியின் கொலைக்கு காரணமானவன் யார் என்று கண்டறிந்து பழி வாங்குவதுதான் படத்தின் திரைக்கதை. சண்டைகாட்சிகள் பின்னி மில் மற்றும் ரெட்டேரி லாரி கிடங்குகளில் மிக பிரமாண்டமாக படமாக்கி உள்ளோம்.
ஒவினாம் கலையை பின்னணி கொண்ட படம் என்பதால் இக்கலையில் பயிற்சி பெற்ற நூறு ஒவினாம் கலைஞர்கள் காரைக்காலில் இருந்து அழைத்து வரப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
பொதுவாக குத்து பாடல்களுக்கு பெயர் வாங்கும் ஸ்ரீகாந்த்தேவா இந்த படத்தில் அருமையான மெலடி பாடல்களை தந்துள்ளார். காமெடி, காதல் கலந்த ஆக்ஷன், திரில்லர் படமாக கலைவேந்தன் உருவாகி உள்ளது.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!