விமர்சனம்
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
கிரிக்கெட் சூதாட்டத்தை காமெடி கலந்து சொல்ல முயற்சிக்கிறார் இயக்குநர் பத்ரி.
கால் டாக்ஸி டிரைவர் கருணாகரனுக்கும் தள்ளு வண்டி இட்லி கடை விஜயலட்சுமிக்கும் லவ். கல்யாணமான அன்றுதான் தெரிகிறது கருணா 10 லட்சம் ரூபாய் கடனாளி என்று. எனக்கு ரெண்டுநாள் கார் ஓட்டு. உன் கடனை நான் தீர்க்கிறேன் என்று கிரிக்கெட் மேச் ஃபிக்ஸிங் புரோக்கர் பாலாஜி சொன்னதை நம்பி, அவரைத் தேடிப் போக, ஹோட்டல் அறையில் பாலாஜி கொலையாகி கிடக்கிறார். பின்னணியில் சூதாட்டக் கும்பல், அவர்களை போலீஸ் எப்படி வளைத்துப் பிடிக்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கருணாகரன் அப்பாவியாக கண்ணை உருட்டி சிரிக்க வைக்கத் திணறினாலும், கதையோடு ஒன்றிப் போகிறார். கல்யாணத்துக்கு தனி பாத்ரூம் கேட்கும் அப்பாவி கேரக்டர் விஜயலட்சுமிக்கு.
இன்ஸ்பெக்டர் பாபிசிம்ஹா தன் மேலதிகாரியான கே.எஸ். ரவிக்குமாரிடம் ஒவ்வொரு முறைமொக்கை வாங்குவதுதான் பலே சிரிப்பு. நாங்க மகாராஷ்ட்ரா போலீஸ் என்ற பாபியிடமிருந்து கருணாவை கடத்திப் போகும் ஆடுகளம் நரேன் கும்பலுக்கு காமெடிக்கு முயற்சிக்கிறது.
ஒளிப்பதிவு ஓகே என்றால் இசை சுமார்.
கிரிக்கெட் சூதாட்டம், ஊழல், உள்குத்து என்று பெரிய பரபரப்பான விஷயம் கிடைத்தும், சுறுசுறுப்பு இல்லாமல், பல இடங்களில் கொட்டாவி எட்டிப் பார்க்கிறது. என்றாலும் கொலை நடந்தது எப்படி? சூதாட்டத்தின் முடிவு என்ன என்ற பரப்பை க்ளைமாக்ஸில் கொடுத்ததால் தப்பினார் இயக்குநர்.
ஆ.ஜெ. - கொஞ்சமாய் சிரிச்சோமடா
குமுதம் ரேட்டிங் - ஓகே















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!