ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் 'ராதே' படம் நாளை மறுநாள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. அதற்கான கட்டணமாக 249 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தன்னுடைய படம் தியேட்டர்களில் வெளியாகாத காரணத்தால் அதன் வசூல் ஜீரோ எனக் குறிப்பிட்டுள்ளார் சல்மான்கான்.
“நான் எப்போதுமே ரம்ஜானுக்கு என்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். இந்த முறை ஜீ ஆதரவில் படத்தை டிஜிட்டல் தளங்களில் வெளியிடுகிறோம். தற்போது மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலரது வருமானம் குறைந்துவிட்ட நேரத்தில் இப்படத்தை மிகக் குறைந்த செலவில் வீட்டிலேயே பார்க்கலாம். இந்த நேரத்தில் மக்களுக்கு கொஞ்சம் என்டெர்டெயின்மென்ட் கொடுப்பதை விரும்புகிறேன்.
இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தியேட்டர்காரர்களிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் நீண்ட காலமாக இதற்காக காத்திருந்தோம், நாடு முழுவதும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடலாம் என்று இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது தெரியவில்லை.
'ராதே' படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஜீரோவாகத்தான் இருக்கும். ஒரு சல்மான்கான் படத்தின் மிகக் குறைந்த வசூலை இந்தப்படம் பெறும். மக்கள் மகிழ்ச்சியாகவே, கவலையாகவே இருக்கலாம். இந்தப்படம் இந்தியாவில் சில தியேட்டர்களில் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் வழக்கத்தை விடக் குறைவான தியேட்டர்கள்தான். அதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.