மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தனது ஆபாச வீடியோக்களை தானே இணையத்தில் வெளியிட்டு பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே. இவர் சமீபத்தில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். மும்பையில் வசித்து வரும் இவர்கள் இருவரும் கோவாவுக்கு ஹனிமூன் சென்றனர்.
அப்போது கோவாவில் உள்ள கனகோனா சாப்போலி நீர்தேக்கத்தில் வைத்து ஆபாச வீடியோ ஒன்றை பதிவு செய்து, ஹாலோவின் சர்ப்ரைஸ் என அதற்கு பெயரிட்டு இணையத்தில் வெளியிட்டார் பூனம். இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் அதிர்ச்சிடைந்தனர். பூனத்துக்கு எதிராக கோவா மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பூனம் பாண்டே. இதையடுத்து ஹனிமூனை பாதியில் முடித்துக்கொண்டு மும்பை திரும்பிவிட்டார்.
கோவா சென்றிருந்த போது கணவர் சாம் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பதாக கோவா காவல்துறையிடம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் பூனம். அப்போது சாமை போலீசார் கைது செய்தனர். பின்னர் புகாரை பூனம் திரும்பப் பெற்றுக்கொண்டதை அடுத்து சாம் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.