Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மத்திய உள்துறை இணை அமைச்சருடன் பாயல் கோஷ் சந்திப்பு

08 அக், 2020 - 14:25 IST
எழுத்தின் அளவு:
Payal-met-central-minister

இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை பாயல் கோஷ் இது தொடர்பாக தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு போராடி வருகிறார். 7 வருடங்களுக்கு முன்பு வாய்ப்பு கேட்டு போனபோது அனுராக் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது அவரின் குற்றச்சாட்டு. இதனை போலீசில் புகார் செய்தார். மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்தார்.

இந்த நிலையில் தற்போது டில்லி சென்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டியை சந்தித்து தனக்கு விரைவாக நீதி கிடைக்க உதவுமாறு கூறி மனு கொடுத்துள்ளார். கிருஷ்ணா ரெட்டி, பாயல் சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்துள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: விரைவான நீதிக்காக அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்திக்க வந்தேன். உள்துறை அமைச்சகத்தின் தலையீடு எனக்கு முக்கியம். ஏற்கெனவே தேசிய மகளிர் ஆணையத்திலும் முறைப்படி புகார் கொடுத்திருக்கிறேன். நான் இந்தியாவிலேயே இல்லை என்று அனுராக் எந்த வித ஆதாரத்தை முன் வைத்தாலும் உண்மை ஒரு நாளும் மறையாது. எனக்கு நீதி கிடைக்கும். என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'மாடர்ன் பிச்சைக்காரி'மாடர்ன் பிச்சைக்காரி கவர்ச்சி படம் வெளியிட்டு வாய்ப்பு தேடும் நடிகை கவர்ச்சி படம் வெளியிட்டு வாய்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09 அக், 2020 - 04:13 Report Abuse
J.V. Iyer பாவம் இந்த பொண்ணு. யாராவது உதவுங்கள். அனுராக் கஷ்யப் இவ்வளவு தரம் தாழ்த்தவரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in