Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போதைப்பொருள் தகவல் வாட்ஸ்அப் குழு தலைவி தீபிகா படுகோனே ?

26 செப், 2020 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Drugs---Deepika-is-admin-for-whatsapp-group

கடந்த சில மாதங்களுக்கு முன் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். அவர் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக தொடங்கப்பட்ட விசாரணை, தற்போது அப்படியே திசைமாறி போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகைகள் மீதான விசாரணையாக உருவெடுத்துள்ளது.

சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டதில், ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, கரிஷ்மா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கும் போதைப்பொருள் பயன்படுத்துவதில் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த விசாரணையின்போது இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த போதைப்பொருட்களை பரிமாறிக்கொள்வதற்கு என்றே பாலிவுட் வட்டாரத்தில் ஒரு வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் அட்மின்களில் ஒருவராக தீபிகா படுகோனே இருக்கிறார் என்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாட்ஸ் அப் குழுவின் தலைவராக, இன்னொரு அட்மினாக இருப்பவர் பிரபலங்களின் மேனேஜராக விளங்கும் ஜெயா ஷா என்பவர் தானாம். அதுமட்டுமல்ல, தீபிகா படுகோனேவின் மேனேஜரான கரிஷ்மா பிரகாஷ் என்பவரும் இந்த குழுவில் ஒரு உறுப்பினராக இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அதெப்படி என்னைப் பற்றி அப்படிப் பேசலாம்: சுனில் கவாஸ்கரைக் கண்டித்த அனுஷ்கா சர்மா!அதெப்படி என்னைப் பற்றி அப்படிப் ... பிகினிக்கு ஏது வயது, அசத்தும் மந்திரா பேடி பிகினிக்கு ஏது வயது, அசத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raja - Chennai,இந்தியா
27 செப், 2020 - 07:21 Report Abuse
Raja JNU போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்க்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் கருத்து சொன்னதற்கு பரிசு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in