Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்தின் தங்கை தவறாக நடக்க முயன்றார் : ரியா பகீர் குற்றச்சாட்டு

20 ஆக, 2020 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Sushant-sister-misbehave-with-me-says-Rheka

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்ததை தொடர்ந்து அந்த வழக்கை மும்பை போலீஸார் விசாரித்து வந்தனர். நேற்று சுப்ரீம் வழக்கை சிபிஐ., யே விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இந்தநிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்தின் தங்கை பிரியங்கா சிங் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார். இதுகுறித்து ரியாவின் லாயர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம் இதுதான்...

ரியாவும் சுஷாந்த்தும் பழக ஆரம்பித்த சில நாட்களில் அவ்வப்போது ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் சென்று தங்குவது வழக்கம். அந்த சமயத்தில் சுஷாந்தின் தங்கை பிரியங்காவும் அவரது கணவரும் கூட சுஷாந்த் வீட்டில் தான் தங்கியிருந்தனர். அப்படி ஒருமுறை ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தபோது பார்ட்டியில் சுஷாந்த்தின் தங்கை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஆண், பெண் என வித்தியாசமில்லாமல் வரம்பு மீறி நடந்துகொள்ள ஆரம்பித்தாராம். அவரை அழைத்துக்கொண்டு சுஷாந்த்தின் வீட்டுக்கு வந்ததும், மீண்டும் சுஷாந்தும் அவரது தங்கையும் மது அருந்த ஆரம்பித்துவிடவே, ரியா சுஷாந்தின் அறைக்கு சென்று படுத்து உறங்கிவிட்டாராம்.

திடீரென நள்ளிரவில் விழிப்பு வந்தபோது தன்னருகில் தன்னை கட்டிப்பிடித்தபடி பிரியங்கா படுத்திருந்ததையும், தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த ரியா, அவரை எச்சரித்து விட்டு மறுநாளே சுஷாந்திடம் இதுபற்றி கூறிவிட்டு கோபத்துடன் தனது வீட்டுக்கு சென்றாராம்.

இதுகுறித்து சுஷாந்த் தனது தங்கையிடம் கடுமையாக சத்தம் போட்டதாகவும், அதையடுத்து வந்த நாட்களில் சுஷாந்தின் குடும்பத்தினர் ரியாவிடம் முகம் கொடுத்து பேசுவதை தவிர்த்தனராம். அதனால் தான் சுஷாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 20 பேர் பட்டியலில் ரியாவின் பெயரை வேண்டுமென்றே சேர்க்கவில்லை” என்று கூறியுள்ளார் ரியாவின் வழக்கறிஞர்.

ஏற்கனவே சுஷாந்த்தின் சகோதரி பிரியங்கா தனது சகோதரரின் தற்கொலைக்கு ரியா தான் காரணம் என அவர் மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில் தற்போது, அவருக்கு எதிராக ரியாவிடம் இருந்து பாலியல் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
உலகின் 'டிஸ்லைக்' வீடியோக்களில் 2வது இடம் பிடித்த 'சதக் 2' டிரைலர்உலகின் 'டிஸ்லைக்' வீடியோக்களில் ... ஜான்வி கபூருக்கு மஞ்சு வாரியர் பாராட்டு ஜான்வி கபூருக்கு மஞ்சு வாரியர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 ஆக, 2020 - 11:32 Report Abuse
Natarajan Ramanathan Muஇந்த வழக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க காரணமே பாலிவுட் திரைத்துறையில் முசுலீம் பயங்கரவாதத்தின் பிடியை வெளி உலகுக்கு தெரியப்படுத்தத்தான். இந்த ரியா சுஷாந்த்சிங் கணக்கில் இருந்து பல கோடி சுருட்டியதுதான் சிபிஐ விசாரணை. இன்னொருவன் வீட்டில் கதவைக்கூட தாள் போடாமல் உறங்குவது நம்பமுடிகிறதா?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21 ஆக, 2020 - 17:16 Report Abuse
Endrum Indian என்ன ரியா சவுக்கியமா என்று மரியாதையில்லாமல் என்னை கேட்டதால் என் மனமுடைந்து மன உளைச்சலில் இருக்கின்றேன் என்று கோர்ட்டில் வக்கீல் மூலமாக வழக்கு போட்டாள் சரிதானே ரியா
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21 ஆக, 2020 - 13:56 Report Abuse
Cheran Perumal தன்மீது குற்றச்சாட்டு வந்ததும் பதிலுக்கு வைக்கும் குற்றசாட்டு இது. இதை முதலிலேயே சொல்லாததன் காரணமென்ன? தற்போது டிரெண்டிங் ஆவது பிணப்பரிசோதனை நடக்கும்போது அருகில் ரியா இருக்கவேண்டிய அவசியமென்ன? அது எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பதுதான்.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
21 ஆக, 2020 - 06:50 Report Abuse
NicoleThomson மகேஷ் பட் கதை போல இருக்கு ரியா
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
21 ஆக, 2020 - 06:40 Report Abuse
Thalaivar Rasigan நீயும் உன் தம்பியும் எதுக்கு 50 கோடி சுஷாந்த் அக்கௌன்ட் ல் இருந்து எடுத்தீர்கள் என்று கேட்டால் எப்படி எல்லாம் கதை சொல்லுகிறாள்?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in