Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வீரத் தளபதி விக்ரம் பாத்ராவின் கதை ஷேர்ஷாஹ்; ஜூலை 3ல் ரிலீஸ்

19 ஜன, 2020 - 11:23 IST
எழுத்தின் அளவு:
shershaah-to-be-released-on-july-3rd

கடந்த 1999ல் நடைபெற்ற கார்கில் போரில் உயிர் தியாகம் செய்தவர் கேப்டன் விக்ரம் பாத்ரா. தன்னுடைய இன்னுயிர் போவதற்கு முன், அவர் செய்த தியாகம் மிகப் பெரியது. அந்த தியாகத்தினை மையமாக வைத்து இந்தியில் ஷேர்ஷாஹ் என்ற பெயரில் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.


ஷேர்ஷாஹ் படத்தை, பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தயாரிக்கிறார். ஸ்டூடென்ட் நம்பர் 1, ஹஸ்சே தொ பஹ்சீ, ஏக் வில்லன், கபூர் அண்ட் சன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் விஷ்ணுவர்தன் படத்தை இயக்கி இருக்கிறார்.


இந்தப் படத்துக்கான முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. விஷ்ணுவர்தன், ஏற்கனவே தமிழில் பட்டியல், பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.


இது குறித்து, படக் குழுவினர் கூறியிருப்பதாவது:


கடந்த ஜூன் 19, 1999ல் தன்னுடைய தலைமையில் Point 5140 என்ற பதட்டம் நிறைந்த இடத்தில், பாகிஸ்தான் படையை தோற்கடித்து, இந்திய தேசியக் கொடியை, ராணுவ அதிகாரியான கேப்டன் விக்ரம் பாத்ரா நாட்டினார். பின், அவரே தன்னுடைய குழுவுடன் மேலும் பதட்டமான பாயிண்ட் 4875 சென்று, எதிரிகளுடன் 36 மணி நேரம் போர் புரிந்தார். இச்சண்டையில், அவருடைய குழுவைச் சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் படை வீசிய வெடிகுண்டில் சிக்கி, கடுமையான காயத்துக்கு உள்ளானார். உடனே, அவரை காப்பாற்றும் முயற்சியில் கேப்டன் விக்ரம் ஈடுபட, எதிரியின் தாக்குதலில் உயிர் இழந்தார். இச்சண்டையில், தன் நண்பரை காப்பாற்றியது மட்டுமல்லாது, பாயிண்ட் 4875யும் கைப்பற்றினார். கார்கில் போரின் வெற்றிக்கு, கேப்டன் விக்ரமின் சாகசம் முக்கிய பங்காற்றியது. கார்கில் போரில் இறக்கும்போது, விக்ரமின் வயது 24தான்.


பாகிஸ்தான் படைக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய கேப்டன் விக்ரம் பாத்ராவிற்கு, அவரது சாகசத்தை பாராட்டி இந்திய அரசு, பரம் வீர் சக்ரா விருது அளித்து கவுரவித்தது. இந்த சம்பவங்களின் அடிப்படையில்தான், ஷேர்ஷாஹ் படம் எடுக்கப்பட்டு வருகிறது.


இந்தப் படத்துக்காக இயக்குநர் ஹர்ஷவர்த்தன் நிறைய பணியாற்றி இருக்கிறார். இந்தப் படம் வரும் ஜூலை 3ல் வெளியாகும்.


இவ்வாறு, படக் குழுவினர் தெரிவித்தனர்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி ... பெண்களை குற்ற உணர்வுக்குத் தள்ளக் கூடாது: கஜோல் பெண்களை குற்ற உணர்வுக்குத் தள்ளக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in