Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சிறுவனை திட்டிய நடிகை ஸ்வராவுக்கு அர்ச்சனை

07 நவ, 2019 - 16:31 IST
எழுத்தின் அளவு:
Swara-Bhaskar-gets-trolled-for-abusing-a-4-year-old-kid

பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவரை நோக்கி வந்த நான்கு வயது குழந்தை ஆன்ட்டி என்று செல்லமாக அழைத்தது. எல்லோருடைய முன்னிலையிலும் தன்னை வயதான பெண் என்பது போல சிறுவன் குறிப்பிட்டு விட்டானே என்ற ஆத்திரத்தில் பொங்கினார் ஸ்வரா பாஸ்கர்.

சிறுவனை திட்டித் தீர்த்ததோடு, அவர் எல்லோர் முன்னிலையும் இழிவாகவும் பேசினார். இதையடுத்து, பார்வையாளர்கள் பலரும் ஸ்வரா பாஸ்கரை கடுமையாகத் திட்டினர். பலர், அவரின் செயலை கேவலப்படுத்துவது போல, சிரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால், என்ன செய்வது என்று புரியாமல் தவித்த நடிகை ஸ்வரா பாஸ்கர், எதுவும் நடக்காதது போல, நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்.

இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ பதிவாக்கப்பட்டதால், அந்த வீடியோ இப்போது, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு விட்டது. இதையடுத்து, வீடியோவைப் பார்க்கும் பலரும் நடிகை ஸ்வரா பாஸ்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், #swara_aunty என்ற ஹேஸ்டாக்கையும் உருவாக்கி, டிரெண்ட் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூட்கேஸ் கைப்பிடி, சக்கரங்களை உடைப்பு: சோனாக்ஷி கோபம்சூட்கேஸ் கைப்பிடி, சக்கரங்களை ... பெருமிதமான  வாய்ப்பு! பெருமிதமான வாய்ப்பு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in