Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட்

13 செப், 2019 - 09:18 IST
எழுத்தின் அளவு:
Alia-bhatt-thanks-to-Anushka

சாயப் பட்டறை கழிவுகள் மூலம் சமூகத்துக்கு எத்தகைய கேடு என்பதை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்துவதற்கும், அத்தகைய கேடு தொடராமல் இருப்பதற்கும் மீ - ஸ்டோர் என்ற சமூக அமைப்பை, நடிகை ஆலியா பட் ஏற்படுத்தி, அதன் மூலம் சமூகத்துக்கான நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

இந்த மீ - ஸ்டோர் மூலம், அவர் சமூக விழிப்புணர்வுக்கான முகாம்களை நடத்துவதற்காகவும், மக்களுக்கு உதவுவதற்காகவும் நடிகர் - நடிகையர், பெருந்தனக்காரர்களிடமெல்லாம் உதவிகளை கோருகிறார். அலமாரியில் தேவையில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் டிரஸ்களையெல்லாம் மீ-ஸ்டோருக்குக் கொடுங்கள்; அதை ஏலம் விடுகிறோம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, விழிப்புணர்வுக்கான பணிகளுக்கு செலவிடுகிறோம் என்று சொல்லித்தான், மீ - ஸ்டோருக்கு பயன்படுத்தாத பிரபலங்களின் துணிகளை கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஆலியா பட்.

இதற்கு, தன் அலமாரியில் இருந்த பயன்படுத்தாத துணிகளையெல்லாம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. கூடவே, இந்த இயக்கத்தில் சேர்ந்து விழிப்புணர்வுக்காக பாடுபடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து, ஆலியா பட் கூறியிருப்பதாவது: நான் ஏற்கனவே எனது இரு அலமாரிகளை மீ-ஸ்டோரில் பகிர்ந்திருக்கிறேன். இந்த முயற்சியில், நடிகை அனுஷ்காவும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது. அவருக்கு என்னுடைய நன்றி. இந்த முயற்சியின் மூலம், பெருந்தனக்கார நடிகர் - நடிகையரும், சமூக விழிப்புணர்வுக்காக கைகோர்த்து செயல்படுவது பெருமையாக இருக்கிறது. இந்த முயற்சி வேகமாக பரவ வேண்டும். இன்னும் நிறைய பேர், இந்த முயற்சிக்கு கைகொடுக்க முன் வர வேண்டும். நான் இது போன்ற முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன். செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வங்கி கொள்ளை முயற்சி: பிரியங்காவிற்கு போலீஸ் எச்சரிக்கைவங்கி கொள்ளை முயற்சி: ... என் இளமைக்குக் காரணம் இட்லி, சாம்பார் - அனில் கபூர் என் இளமைக்குக் காரணம் இட்லி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in