Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை

24 ஏப், 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
No-PM-Narendra-Modi-biopic-release-before-May-19

பிரதமர் மோடியின் வாழ்க்கை படமான, "பி.எம்., நரேந்திர மோடி" சினிமாவை மே 19 ம் தேதி வரை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் இளமை காலம் முதல் அவர் பிரதமரானது வரை, அவரது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் "பி.எம்., நரேந்திர மோடி". மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கி உள்ளார். இது தேர்தல் சமயம் என்பதால் இப்படத்தை வெளியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியின் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் படத்தை வெளியிட அனுமதி அளித்தது. தணிக்கை செய்யப்பட்டு படமும் வெளியாக ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில் படத்தை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இதனை எதிர்த்து பட தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், படத்தை பார்த்து விட்டு அது தொடர்பாக ஏப்.,22 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து படத்தை பார்த்த தேர்தல் அதிகாரிகள், அது தொடர்பாக அறிக்கையை நேற்று(ஏப்., 23) தாக்கல் செய்தனர். இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இப்படத்தில் மோடியின் வாழ்க்கை கதையை விட அதிகமாக மோடியின் புகழ் பாடப்பட்டுள்ளது என தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், தேர்தல் சமயத்தில் இப்படத்தை வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறுவதாகும். குறிப்பிட்ட கட்சியை முன்னிலைப்படுவதாக இப்படம் உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடக் கூடாது. கடைசிக்கட்ட தேர்தல் நடைபெறும் நாளான மே 19 வரை இப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் பல காட்சிகளில் முக்கிய எதிர்க்கட்சி ஊழல் கட்சி எனவும், தாங்கள் ஏழைகளுக்கான கட்சி எனவும் காட்டப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏப்., 26ம் தேதிக்குள் இந்த அறிக்கை மற்றும் படம் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து பதில் அளிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்மோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : ... ஹிந்தி 'காஞ்சனா'  : ராகவா லாரன்ஸ் இயக்குவது உறுதி ஹிந்தி 'காஞ்சனா' : ராகவா லாரன்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஏப், 2019 - 03:51 Report Abuse
J.V. Iyer இந்த படம் எப்போது வந்தாலும் ஹிட்..ஹிட்.. ஹிட்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in