
26 வருடங்களாக கிடப்பில் இருந்த இர்பான் கானின் படம் யு-டியூபில் வெளியீடு
பாலிவுட் நடிகர் இர்பான் கான், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் காலமானார். 2000ல் அவர் நடித்த "தி லாஸ்ட் டெனன்ட்" என்கிற திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சுமார் 26 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் தற்போது நேரடியாக யு-டியூபில் வெளியாகியுள்ளது. சர்தக் தாஸ்குப்தா என்பவர் இயக்கிய இந்த 43 நிமிடப் படத்தில், நடிகை வித்யா பாலனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவருமே திரையுலகில் பிரபலமாகாத காலகட்டத்தில் இந்தப் படம் உருவானது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!