ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் |

பாலிவுட்டில் கடந்த 2023ல் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் என்றாலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிப்தி டிம்ரி என்பவர் ரசிகர்களிடம் பெரிய அளவில் கவனம் பெற்றார். இதை தொடர்ந்து அவருக்கு தற்போது ஹிந்தியில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்ல தெலுங்கில் ராம்சரண் ஜோடியாக 'ஸ்பிரிட்' படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் திரிப்தி டிம்ரி.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் விக்டோரியாஸ் சீக்ரெட் என்கிற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் திரிப்தி டிம்ரி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதற்கு முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்கள் மட்டுமே இதன் விளம்பர தூதர்களாக இடம் பெற்று வந்த சூழலில், முதல்முறையாக இந்த பொறுப்பை இந்திய பிரபலம் இந்த பெருமையை பெற்றுள்ளார் நடிகை திரிப்தி டிம்ரி.