டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' |

நடிகை சுஹாசினி மணிரத்னம், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் செலெக்ட்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2023ல் மலையாளத்தில் வெளியான 'பூக்காலம்' என்கிற படத்தில் நடித்த அவர், தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு 'அஞ்சாம் பிரமாணம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சைக்காலஜிக்கல் திரில்லராக 1980களில் பின்னணியில் ஒரு கட்டுப்பாடான கிறிஸ்துவ குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா பூஜையுடன் கொடுங்கல்லூரில் துவங்கியது. ஹிந்தியில் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த 'பேச்சாரா' படத்தில் அறிமுகமான நடிகை நிமிஷா இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார்.




