பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் |

ரன்வீர் சிங் நடிப்பில் திரைக்கு வந்துள்ள 'துரந்தர்-2' படம் உள்நாடு, வெளிநாடு என மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் இதுவரை இப்படம் 1,658 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக, மும்பை திரையரங்குகளில் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.
பொதுவாக ஒரு படம் மும்பையில் நன்றாக ஓடினால் அது ரசிகர்களிடையே வலுவான வரவேற்பை பெற்றுவிடும். அந்த அடிப்படையில் இந்த துரந்தார்-2 படம் மும்பை தியேட்டர்களில் இதுவரை 317 கோடி வசூலித்திருக்கிறது. இதற்கு முந்தைய சாதனையாக 'சாவா' என்ற படம் 265 கோடி வசூலித்திருந்தது. அதைவிட இப்போது துரந்தர்-2 அதிகமாக வசூலித்து மும்பை திரையரங்குகளில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக முதலிடம் பிடித்துள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் இந்த வசூலை முறியடிப்பது மற்ற படங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு, தொடர்ந்து இந்த படம் மும்பை தியேட்டர்களில் வசூலித்து வருவதால் இந்த 317 கோடி என்பது 400 கோடியை கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.