ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? |

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(36) உடல்நலக் குறைவால் திடீரென மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தீபிகாவிற்கு உடல்சோர்வு ஏற்பட்டு மயக்க அடைவது போன்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கெள்ளப்பட்டன. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அவருக்கு உடலில் என்ன பிரச்னை என்ற விபரம் வெளியாக வில்லை.
சில வாரங்களுக்கு முன் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தில் நடித்தபோதும் தீபிகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது அவரது இதய துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.