Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சம்பளப் பிரச்சினை செய்யும் நடிகை

26 அக், 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Gossips

சென்னை: தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் இந்த நடிகைக்கு நல்ல பேர் உண்டு. ஆனால் தற்போது கைவசம் படங்கள் தான் எதுவும் இல்லை.

தமிழில் உச்ச நடிகர்களுடன் நடித்த இந்த நடிகை, எடைப் பிரச்சினையால் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இதற்கிடையே திருமண வதந்திகளும் அவரது பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைத்தது. தற்போது தான் ஏதேதோ செய்து உடல் எடையைக் குறைத்து திரும்பவும் புதிய படவாய்ப்புகளை பெறும் வேலைகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு நடிகை வீட்டு கதவைத் தட்டியது. ஆனால் அவரோ நம்பர் நடிகை மாதிரி கோடிகளில் சம்பளம் கேட்கவே தயாரிப்பாளர் ஆடிப் போய் விட்டாராம். ஒருவழியாக நடிகையை சமரசம் பண்ணி ஒரு கோடிக்கு ஓகே செய்தார்களாம்.

தொடர்ந்து படங்கள் கொடுத்து வரும் நடிகர் என்பதால் நடிகையும் சம்மதம் சொல்லி விட்டார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென தயாரிப்பாளர் 50 லட்சம் தான் தருவேன் என மாற்றிப் பேசத் தொடங்கி விட்டாராம்.

நடிகை விடுவாரா. ஒரு கோடி தந்தால் தான் நடிப்பேன் என பிடிவாதமாகக் கூறி விட்டாராம். இதனால் வேறு வழியில்லாமல் தயாரிப்பு தரப்பு இறங்கி வந்து விட்டதாம்.

தமிழில் வேறு படங்களே கைவசம் இல்லையென்ற போதும், நடிகை இவ்வளவு பந்தா பண்ணுகிறாரே என தயாரிப்பு தரப்பில் புலம்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆடையால் பேரைக் கெடுத்துக் கொண்ட நடிகைஆடையால் பேரைக் கெடுத்துக் கொண்ட ... காதலரிடம் சரணடைந்த நடிகை காதலரிடம் சரணடைந்த நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muraleedharan.M - Chennai,இந்தியா
27 அக், 2019 - 04:58 Report Abuse
Muraleedharan.M யார் அந்த நடிகை.
Rate this:
Raghunathan - Bangalore,இந்தியா
28 அக், 2019 - 11:00Report Abuse
Raghunathananushka...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in