Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பிப்ரவரி 2020 படங்கள் ஓர் பார்வை - சிறிய படங்களின் வெற்றி

11 மார், 2020 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Small-Budget-movie-hit-in-Feb-2020

2020ம் ஆண்டின் இரண்டாவது மாதம் முடிந்து மூன்றாவது மாதத்தில் பத்து நாட்களும் கடந்துவிட்டது. இந்த 70 நாட்களில் வெளிவந்த படங்களில் ஒரு படமாவது பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறதா என்று இதுவரை வெளிவந்த படங்களைப் பற்றிப் பார்த்தால் அதில் ஒன்று கூட இல்லை என்பது பெரும் அதிர்ச்சியே.

கடந்து போன இரண்டு மாதங்களின் 8 வாரங்களில் வாரத்திற்கு சராசரியாக 4 படங்கள் வெளியாகி இதுவரையிலும் 34 படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் முன்னணி நடிகர்களின் ஒரு படம் கூட ஏன் பெரிய வெற்றியோ, சாதனை வசூலோ பெறவில்லை என்பதை திரையுலகினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜனவரி மாதத்தில் 17 படங்கள் வெளிவந்தன. பிப்ரவரி மாதத்தில் 19 படங்கள் வெளிவந்துள்ளன. ஜனவரி மாதத்தில் 'தர்பார், பட்டாஸ், டகால்ட்டி, நாடோடிகள் 2' ஆகிய படங்கள் ஓரளவிற்காவது லாபத்தைத் தரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்கள்தான் அதிகம்.

பிப்ரவரி மாதத்தில் 19 படங்கள் வெளிவந்துள்ளன. அந்த படங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் என்று ஒன்று கூட இல்லை. மாறாக சிறிய பட்ஜெட் படங்களும் சிறிய நடிகர்கள் நடித்த படங்களும்தான் வெளிவந்தன. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 'ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், திரௌபதி' ஆகிய சிறிய படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலையும், லாபத்தையும் கொடுத்துள்ளன.

பிப்ரவரி 7ம் தேதி, “அடவி, சண்டிமுனி, புலிக்கொடி தேவன், சீறு, வானம் கொட்டட்டும்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'சீனு, வானம் கொட்டட்டும்' ஆகிய படங்கள் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை.

பிப்ரவரி 14ம் தேதி, “டே நைட், நான் சிரித்தால், ஓ மை கடவுளே'' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'நான் சிரித்தால், ஓ மை கடவுளே' இரண்டு படங்களும் வெற்றி பெற்றது என இரண்டு படக்குழுவினரும் சக்சஸ் மீட் நடத்தி ரசிகர்களுக்கு நன்றி சொன்னார்கள். இவற்றிலும், 'நான் சிரித்தால்' படத்தை விடவும் 'ஓ மை கடவுளே' படம் அதிக வசூலைப் பெற்றதாம். மேலும, படத்தின் சாட்டிலைட் உரிமையும் எதிர்பார்த்ததைவிடவும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21ம் தேதி, “பாரம், காட் பாதர், கன்னி மாடம், குட்டி தேவதை, மாபியா, மீண்டும் ஒரு மரியாதை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'மாபியா' படம் மட்டுமே ஓரளவிற்குத் தாக்குப் பிடித்து ஓடியது. தேசிய விருது பெற்ற 'பாரம்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வந்த சுவடு தெரியாமல் போனது. 'கன்னி மாடம்' படம் அதன் கருத்திற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. பாரதிராஜா இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'மீண்டும் ஒரு மரியாதை' படம் எதற்காக எடுக்கப்பட்டது என பாரதிராஜாவுக்கே தெரிந்திருக்குமா எனப் புரியவில்லை. 'மாபியா' படம் விமர்சனத்தைப் பெற்ற அளவிற்கு வசூலைப் பெறவில்லை என்பதே உண்மை.

பிப்ரவரி 28ம் தேதி, “திரௌபதி, கல்தா, இரும்பு மனிதன், கடலில் கட்டு மரமாய், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் 'திரௌபதி' படம் டிரைலர் வெளியானதுமே சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையை வைத்தே படத்தின் வியாபாரத்தையும் முடித்து வசூலையும் பெற்றனர். படத்தை எந்த விதத்தில் எல்லாம் நெகட்டிவ்வாக விளம்பரப்படுத்த முடியுமோ அப்படி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் படத்தின் இயக்குனர் மோகன் ஜி. அதே சமயம் இம்மாதிரியான படங்கள் வருவது தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல என்ற குரலும் அதிகம் எழுந்தது. பிப்ரவரி மாதத்தின் சர்ப்ரைஸ் வெற்றி 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. அப்படி ஒரு படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது கூட பலருக்கும் தெரியாது. அது ஒரு மலையாள டப்பிங் படம் என்று நினைத்தவர்கள்தான் அதிகம். ஆனால், படத்தைப் பார்த்த பின் அதற்குக் கிடைத்த பத்திரிகை விமர்சனங்கள், இணையதள விமர்சனங்கள் படத்திற்கு ரசிகர்களை வரவழைத்தன. ஒரு வாரத்தில் படக்குழுவினர் சக்சஸ் மீட் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2020ம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது வசூல் ரீதியாக மூன்று படங்கள் தாக்குப் பிடித்தன. கடந்த சில வருடங்களாகவே இருக்கும் வசூல் நிலை தமிழ் சினிமாவில் இப்போதும் தொடர்வது ஆச்சரியம்தான். அதற்குக் காரணம் படங்கள்தான்.

பெரிய படமோ, சிறிய படமோ அது பிரச்சினையில்லை ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களாக அவை இருந்தால் நிச்சயம் வசூலை ஈட்டும் என்பதைக் கடந்த மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற சில படங்கள் நிரூபித்துள்ளன. அதைப் புரிந்து கொண்டு இனி வரும் நாட்களிலாவது வெற்றிகரமான படங்களைக் கொடுக்க திரையுலகினர் முயற்சிக்கட்டும்.

பிப்ரவரி 2020 வெளியான படங்கள்...

பிப்ரவரி 7 : அடவி, சண்டிமுனி, புலிக்கொடி தேவன், சீறு, வானம் கொட்டட்டும்

பிப்ரவரி 14 : டே நைட், நான் சிரித்தால், ஓ மை கடவுளே

பிப்ரவரி 21 : பாரம், காட் பாதர், கன்னி மாடம், குட்டி தேவதை, மாபியா, மீண்டும் ஒரு மரியாதை

பிப்ரவரி 28 : திரௌபதி, கல்தா, இரும்பு மனிதன், கடலில் கட்டு மரமாய், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எங்கே செல்லும் இந்த பாதை? சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள்எங்கே செல்லும் இந்த பாதை? சங்கடம் ... டிஜிட்டல் தளத்தில் சினிமா : தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வரமா... சாபமா...! டிஜிட்டல் தளத்தில் சினிமா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

11 மார், 2020 - 12:29 Report Abuse
chandran திரௌபதி பட பார்வை சரியில்லை. நடந்த உண்மை சம்பவத்தை சிறப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி. எல்லா பெண் பிள்ளைக்கும் ஒரு எச்சரிக்கையை தந்துள்ளார். நேர் கொண்ட பார்வை படமும் இதேபோன்றதுதான். அந்த படத்தில் காரில் ஒரு சீன் பிள்ளைகளோடு பார்க்க சங்கடமாக இருந்தது. ஆனால் திரௌபதி ஒரு எச்சரிக்கை. டிரைலர் தான் விட்டாரு மோகன் ஜி. அதை பிரமோட் பண்ணவங்க தப்பு செஞ்சவங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in