Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2019ல் கண்ணீரில் மிதக்க விட்டு, மண்ணுலகை விட்டு பிரிந்தவர்கள்

31 டிச, 2019 - 10:49 IST
எழுத்தின் அளவு:
2019-:-Celebrities-who-pasess-away

கலைத்துறையில் மகத்தான சாதனைளை படைத்து விட்டு கலை உலகில் இருந்தும், இந்த உலகில் இருந்தும் பிரிந்து சென்றவகள் பலர். அவர்களில் முக்கியமானவர் இயக்குனர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாததே, ஜானி என தமிழ் சினிமாவுக்கு பொக்கிஷங்களை வழங்கிய இயக்குனர் மகேந்திரன் ஏப்ரல் 2ல் காலமானார்.

40 படங்களுக்கு மேல் இயக்கி, 200 படங்களுக்குமேல் நடித்த நடிகை விஜயநிர்மலா தனது 73வது வயதில் ஜூன் 27ல் காலமானார். உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்தவர்.

நாடக உலகில் சாதனை படைத்து சினிமாவுக்கு வந்தவர் கிரேஸி மோகன். கமல்ஹாசனின் 6வது விரல் என போற்றப்பட்ட கிரேஸி மோகன், தனது 66வது வயதில் ஜூன் 10ல் காலமானார். காமெடி நடிகராகவும் தனி இடம் பிடித்தவர்.




அஜித்தை அறிமுகப்படுத்தியவரும், தெலுங்கு திரையுலகின் எழுத்தாளரும், இயக்குனரும், நடிகருமான கொல்லுப்புடி மாருதி ராவ் தனது 80வது வயதில் காலமானார்.

தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை கீதாஞ்சலி தனது 71வது வயதில் அக்டோபர் 31ல் காலமானார். பணம் படைத்தவன், ஆசை முகம், அதே கண்கள், நெஞ்சிருக்கும் வரை, சாரதா உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர்கள் தவிர இயக்குனரும், நடிருமான ராஜசேகர், நடிகர் பாலாசிங், தயாரிப்பளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி, ஆலயம் ஸ்ரீராம், காமெடி நடிகர் டைபிஸ்ட் கோபு, சத்தார், கிருஷ்ணமூர்த்தி, ஜெயச்சந்திரன், விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசன் ஆகியோரும் இந்த ஆண்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா 2019: யார் டாப்?தமிழ் சினிமா 2019: யார் டாப்? 2019ல் கெட்டி மேளம் கொட்டியவர்கள் 2019ல் கெட்டி மேளம் கொட்டியவர்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
02 ஜன, 2020 - 03:56 Report Abuse
meenakshisundaram திரை உலகிலும் 'மாணிக்கங்கள் 'நிறையவே உள்ளார்கள் என்பதை அவர்களின் மறைவு காட்டுகிறது .இவர்கள் அனைவருமே பணம் ஒன்றையே குறியாக இல்லாமல் வாழ்ந்ததை இளம் கலைஞர்கள் உணர வேண்டும்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01 ஜன, 2020 - 04:09 Report Abuse
skv srinivasankrishnaveni கிரேசி மோகன் மறைவு ரொம்பவே அதிர்ச்சியை தந்தது மற்றவர்களும் சாதனையாளர்களே தான் சற்றும் எதிர்பாராமல் வந்து மோகன் மறைவு ஷாக் இன்னம் போலே
Rate this:
oce - tokyo,ஜப்பான்
31 டிச, 2019 - 20:43 Report Abuse
oce ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டார் மீளமாட்டார். வான் வெளியில் உலவும் நுண்ணிய உயிரணுக்களுடன் தமது கர்மாக்களை தாங்கிய தொரு உயிரணுவாக அடுத்த பிறவி தேடி அலையும் இந்த ஆத்மாக்கள் சாந்தி பெற்று மீண்டும் நற்பிறவி எடுக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in