பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க மறுத்து, பின் சிவாஜி நடித்து வெளிவந்த “ராணி லலிதாங்கி” | கருப்பு படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியது ஏன்? : சொல்கிறார் சாய் அபயங்கர் | மும்பைக்கு குடியேறுகிறாரா அல்லு அர்ஜுன்? | பாண்டிராஜ் உடன் மீண்டும் இணையும் கார்த்தி | ரத்னகுமாரின் ‛29' படம் மே 8ம் தேதி ரிலீஸ் | நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக., | 'கேஜிஎப் 3' பற்றி அப்டேட் கொடுத்த யஷ் | வேலுாரில் நடந்த உண்மை சம்பவம்: 'கர' குறித்து இயக்குனர் பேட்டி | தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்: அதிகரிக்கும் படப்பட்டியல் | 2026 தமிழக தேர்தல் களம் : இருமுனை போட்டியா... நான்குமுனை போட்டியா... விஜய்க்கு எப்படி... : திரைப்பிரபலங்களின் கருத்து |
துணை நடிகர் தான் என்றாலும், களம் கண்டது காமெடியில் என்பதால், முகம் பார்த்தால் இவரை தெரிந்து விடும். விஜய் கணேஷ் என்ற பெயரை கேட்டதும், "ஆள் "கும்னு... இருப்பார் போல, என, நினைப்பவர்களும் உண்டு. என்ன செய்ய, காமெடிக்கு, இவர் உருவம் தான் "பிளஸ். "சினிமாவுக்கு எப்படி போனீங்க... என, நாம் கேட்க, ""பஸ்சுல தான்... என, அவர் கடிக்க, ஆரம்பமே கலகலத்தது. இதோ மிச்சத்தையும் கேட்டு சிரிங்க...
* உங்களுக்கு ஏன் சினிமா ஆசை?
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி என் ஊர். சின்ன வயசுல, "ஒரு தலை ராகம் ஸ்ரீநாத் மாதிரி இருப்பேன். சாரி... அவர் என்னை மாதிரி இருப்பார்(ஹி...ஹி...ஹி...). ஆசை வந்துருச்சு... சென்னை கிளம்பிட்டேன் (நீங்க எத்தனாவது ஆளு...).
* வந்ததும் வாய்ப்பு கிடைச்சிருக்குமே...
நிறைய கெடச்சது... சென்னையில் இருக்குற எல்லா பிளாட்பாரத்துலயும் தூங்குற வாய்ப்பு. ஒரு ஓட்டல் விடாமல், "டேபிள் தொடச்சேன். இந்த வாய்ப்பு எல்லாம் யாருக்கு கெடைக்கும்...? (உங்க நேர்மை எங்களுக்கு பிடிக்குது)
* சர்வருக்கு "சான்ஸ் கிடைத்ததா?
நெனச்சு பார்த்தா, எனக்கே ஆச்சர்யமா இருக்கு... எப்படி வாய்ப்பு கெடச்சுச்சுன்னு... (எங்ககிட்ட கேட்டா...) "வெளிச்சம், "அன்புள்ள தங்கச்சிக்கு, "கோயில் மணி... என, நிறைய படங்கள், வில்லனுக்கு எடுபிடியா நடிச்சேன்.
* எடுபிடி எப்படி காமெடிக்கு தாவினார்?
"புத்தம் புது பூவே படத்துல காமெடி வாய்ப்பு வந்துச்சு. முதல் படம் ஜோரா நடிச்சுட்டு வந்தேன். கடைசி வரைக்கும் அந்த படம் ரிலீஸ் ஆகலை(சூப்பர் ராசி...). அப்புறம், விவேக், வடிவேலு சார்கள் வாய்ப்பு தந்தாங்க...
* ஆமா... நீங்க வடிவேலு டீம்ல இருந்தீங்கள்ல...
எவ்வளவு லேட்டா... கேட்குறீங்க... எங்க டீமு கலக்கு... கலக்குனு... கலக்குச்சே சார்...
* அப்போ... அண்ணன் சிங்கமுத்துவும் அங்கே தானே இருந்துருப்பாரு...
அண்ணே... நீங்க எங்கே சுத்தி, எங்கே வர்றீங்கன்னு நல்லா தெரியுது... வேணாம்ணே... (மனுஷன் உஷார்... நாம விடுவோமா!)
* சும்மா... சொல்லுங்க, வடிவேலு எப்படி? சிங்கமுத்து எப்படி?
அண்ணே... வடிவேலு எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். சிங்கமுத்து எனக்கு நிறைய பண உதவி செய்தவர். இரண்டு பேரும் எனக்கு கண் மாதிரி. எல்லாரும் நல்லாத்தான் இருந்தோம்.
* பிறகு ஏன் சண்டை வந்துச்சு...?
இப்ப நெனச்சு பார்த்தா கூட, ஆச்சர்யமா இருக்கு... என்ன நடந்துச்சுன்னே தெரியலை. திடீர்னு... எங்க டீமு உடஞ்சு போச்சு... எல்லாரும் ஆளுக்கு ஒரு திசையா போயிட்டோம்.
* எப்போ தான் ஒன்று சேருவீங்க?
எல்லாம் அவன் செயல்...(வானை நோக்கி இரு கைகளை தூக்கினார்)
* உங்க "டீம் உடைந்த பிறகு நிறைய புது முக காமெடியன்கள் வந்தாச்சே...
இப்போ "குரூப் காமெடி இல்லை. "சோலோ தான். "டிரண்ட்டுக்கு ஏத்த மாதிரி ரசிக்கிறாங்க. நேரம் நல்லா இருந்தா, "பிக் அப் ஆயிரும்ணே...
* எல்லாம் சரி, கடைசி வரைக்கும் நீங்க கதாநாயகன் ஆகலேயே?
நான் மறந்தாலும், நீங்க விட மாட்டீங்க போல... நானே கதை எழுதி, கண்டிப்பா நடிப்பேங்க... (யார் பாக்குறதுன்னு சொல்லலேயே), என, கனவுக்கு தயாரானார். நமக்கு சிரிப்பு வருவதை அறிந்து கொண்டு, ""பார்த்தீங்களா... நீங்களே சிரிச்சுட்டீங்க... அது தான் சார்... நகைச்சுவை... இது ஒன்னு போதும், நான் கதாநாயகன் ஆகுறதுக்கு... என, விஜய் கணேஷ் சொல்ல, தெரிந்து விடும் என்பதால், மனதுக்குள் சிரித்த படி, அவரிடம் இருந்து விடை பெற்றோம்.