Advertisement

சிறப்புச்செய்திகள்

நெட்டிசனின் மோசமான கேள்வி- கூலாக பதில் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! | தனுஷின் ‛ராயன்' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த இசையமைப்பாளர் தேவா! | தமிழ் புத்தாண்டில் வெளியான ‛இந்தியன்-2' படத்தின் போஸ்டர்! | மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் நயன்தாரா! | விஜய் குரலில் ‛விசில்போடு': ‛கோட்' படத்தின் முதல்பாடல் 6 மணிக்கு வெளியீடு | சல்மான்கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு | 2026ல் அரசியல் கட்சி துவங்குவதாக விஷால் அறிவிப்பு | முத்தையா இயக்கும் சுள்ளான் சேது முதல் பார்வை வெளியானது! | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் ‛பென்ஸ்' | ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வரும் அரண்மனை 4! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

முல்லையாக நடிக்க பயம்: லாவண்யா சிறப்பு பேட்டி

21 மே, 2023 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Lavanya-exclusive-interview

தன்னிகரில்லா நடிப்பின் மூலம் ஊரையே திரும்பி பார்க்க வைத்து, 'முல்லையாக' படர்ந்து பரவி வீடுகளில் பெண்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார் நடிகை லாவண்யா.
அவர் கூறியது:
நான் திருப்பூர் பொண்ணு. அம்மா புடவை, மளிகை பிசினஸ் செய்கிறார். அப்பா கொரியர் சர்வீஸ் வைத்துள்ளார். கூட பிறந்தவங்க ஒரு அக்கா, தம்பி. பள்ளி படிப்பு எல்லாம் திருப்பூர்ல தான். கோவையில் பி.ஏ., பொருளாதாரம் முடித்தேன்.
எங்கள் ஊர் பகுதியில் கல்லுாரி படிப்பு முடிந்தவுடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பர். ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே வேலைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தேன். கல்லுாரியில் படிக்கும் போதே எனது மேற்படிப்பிற்காக பணம் சேமித்து வைக்க தொடங்கினேன். இதற்காக 40 பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்' எடுத்தேன்.

அப்பணத்தை கொண்டு வங்கி வேலைக்கு படித்தேன். பின்னர் வங்கி வேலை கிடைத்தது. வங்கியில் கிளை மேளாளராக ஆக வேண்டும் என்பதே என் குறிக்கோள். ஆனால் இயந்திர வாழ்க்கையை தாண்டி ஏதாவது சாதிக்க வேண்டும் என தோன்றியது.
புடவை விற்பனை பிசினஸ் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவற்றை போட்டோ எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு நானே மாடலாக இருந்தேன். பின்னர் விளம்பர படங்கள், மாடலிங் என கிடைக்கும் நேரத்தில் செய்து கொண்டிருந்தேன். அதன் மூலம் மாடலிங்கினுள் வந்தேன்.

2018ல் 'குயின் ஆப் மெட்ராஸ்' டைட்டில் வாங்கினேன். 2020 'மிஸ் தமிழ்நாட்டில்' 2வது ரன்னர் அப், மிஸ் சவுத் இந்தியாவில் 'மிஸ் போட்டோஜெனிக்' டைட்டில்கள் பெற்றேன். 'மிஸ் இந்தியா'விற்கும் தேர்வாகினேன் சில பிராஜெக்ட்கள் வந்ததால் அதனை தவறவிட்டேன்.
2 வெப் சீரிஸ், 3 படங்கள், 2 சீரியல்கள், தனியார் டிவி நிகழ்ச்சி, குறும்படங்கள் நடித்துள்ளேன். தற்போது பாண்டியன் ஸ்டோர்சில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இக்கதாபாத்திரத்தில் முல்லையாக நடிக்க மிகவும் பயந்தேன். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்ணாக மாறிவிட்டேன். நடிகர் சிவகார்த்திகேயனுடன் படம் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.
வங்கி வேலையை விட்டு நடிப்பு துறைக்கு செல்ல வேண்டும் என்றபோது பெற்றோர் விருப்பம் கொள்ளவில்லை. என்னுடைய முடிவில் அழுத்தமாக இருந்தேன். பல போராட்டங்களுக்கு பின் நான் இத்துறைக்கு வந்தேன். காலப்போக்கில் அவர்கள் என்னை புரிந்துகொண்டனர். பெற்றோர்களே உங்கள் குழந்தை மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் செல்லும் பாதை சரியானதாக இருக்கும் என நம்புங்கள். நிச்சயம் உங்களை பெருமைபடுத்துவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வைக்கம் விஜயலட்சுமிக்கு எல்லாமே சங்கீதம்தான்!வைக்கம் விஜயலட்சுமிக்கு எல்லாமே ... பாண்டியர்களின் வாழ்வியலை கூறும் யாத்திசை: இயக்குனர் தரணி ராசேந்திரன் பாண்டியர்களின் வாழ்வியலை கூறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in