Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2022 - வசூலில் சாதித்த தென்னிந்தியப் படங்கள்

11 அக், 2022 - 12:36 IST
எழுத்தின் அளவு:
2022-:-South-Indian-Films-made-record-in-collection

இந்தியப் படங்களின் வசூல் சாதனையில் 'பாகுபலி' படத்தின் வசூலுக்குப் பிறகு நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிப் படங்களான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களை மாநில மொழிப் படங்களாக மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால், 'பாகுபலி' படத்தின் பான் இந்தியா வெற்றி தென்னிந்திய மொழிப் படங்கள் மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றியது.

'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலக அளவில் 2000 கோடி வசூலை அள்ளியது. அதற்குப் பிறகு வெளிவந்த சில தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் பெரும் வசூலைக் குவிக்க ஆரம்பித்தன. குறிப்பாக இந்த 2022ம் ஆண்டில் தெலுங்கு, தமிழ், கன்னடப் படங்களின் வசூல் ஹிந்திப் படங்களைக் காட்டிலும் மாபெரும் வசூலைக் குவித்துள்ளது ஆச்சரியமான ஒன்று.



கன்னடத் திரையுலகத்திலிருந்து இப்படி ஒரு படமா என வியக்க வைத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களும் 1500 கோடி வரை வசூலித்தன. இந்த இரண்டு படங்களும் ஹிந்திப் படங்கள் வசூலை வாரிக் குவிக்கும் வட இந்திய மாநிலங்களில் கூட பெரிய வசூலைக் குவித்து பாலிவுட்டிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த ஆண்டில் வெளியான 'கேஜிஎப் 2' படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. இதன் வசூல் 1200 கோடியைக் கடந்தது. இந்தப் படம் மூலம் கன்னட நடிகரான யஷ் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டார்.



இந்த ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' உலக அளவில் 1200 கோடி வரை வசூலைப் பெற்றுள்ளது. இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் அவரது இரண்டாவது 1000 கோடிப் படம். அவரது இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2' படமும் 1000 கோடி வசூலைக் கடந்த ஒரு படம்.

தமிழில் இந்த ஆண்டில் வெளியான 'விக்ரம்' படம் உலக அளவில் 500 கோடி வசூலைக் கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. அந்த வசூல் சாதனையை சமீபத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' சீக்கிரத்திலேயே முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் இரண்டு படங்கள் 500 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு ஆண்டிலும் இப்படிப்பட்ட ஒரு சாதனை நிகழ்ந்ததில்லை.



கடந்த 9 மாதங்களில் வெளியான ஹிந்திப் படங்களில் 'காஷ்மீர் பைல்ஸ்' படம் 350 கோடி வசூலித்தது. 'பிரம்மாஸ்திரா' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஹிந்தியில் இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் இந்த இரண்டு படங்கள் மட்டும்தான் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. இரண்டையும் சேர்த்து கணக்கிட்டால் 750 கோடி.

ஆனால், தென்னிந்திய மொழிப் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, விக்ரம், பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் 400 கோடி வசூலைக் கடந்த படங்களாகவும் இதுவரையில் மொத்தமாக 3300 கோடி வசூலை வசூலித்துள்ளன.



தியேட்டர்கள் வசூல் மட்டும்தான் நாம் மேலே குறிப்பிட்டவை. அவற்றின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவற்றையும் சேர்த்தால் அவையும் ஆயிரம் கோடியைத் தொட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்னும் சில பிரம்மாண்டப் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இதுவரையில் பாலிவுட் படங்கள் என்று சொல்லப்படும் ஹிந்திப் படங்கள் மட்டுமே பெற்ற அதிகபட்ச வசூலை போட்டி போட்டு தென்னிந்தியப் படங்களும் பெற ஆரம்பித்துவிட்டன. இந்தியத் திரையுலகத்திற்கு இது பெரும் வளர்ச்சியாகும். இதன் மூலம் உலக அளவில் இந்தியத் திரைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படும் படங்களாகவும் மாறிவிட்டன.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'பொன்னியின் செல்வன்' வெற்றி, வரலாற்றுப் படங்களின் வாசலை மீண்டும் திறக்கிறதா?'பொன்னியின் செல்வன்' வெற்றி, ... அதிகாலை காட்சிகள் - பயப்பட ஆரம்பிக்கும் ஹீரோக்கள்? அதிகாலை காட்சிகள் - பயப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
12 அக், 2022 - 10:43 Report Abuse
rajan_subramanian manian ஹாசன் , பெயர் நன்றாக உள்ளது. எல்லோரும் பயன்படுத்த அவா.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 அக், 2022 - 04:52 Report Abuse
J.V. Iyer கன்னடம், தமிழ் தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட். இந்த தென்னிந்திய படங்களில் மலையாளம் எங்கே? மல்லு எங்கே?
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11 அக், 2022 - 18:38 Report Abuse
Natarajan Ramanathan ஆனால் மகா மட்டமான விக்ரம் படம் வெற்றி அடைந்தது மலஹாசனாலேயே ஜீரணிக்க முடியாத வெற்றி....
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
12 அக், 2022 - 07:55Report Abuse
Priyan Vadanadஅவரது பெயரைப்போலவே அருமையாக சரியாக இருக்கிறது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in