2006ம் ஆண்டு வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில் , உன்னாலே உன்னாலே படத்தில் ஜூன் போனால் போன்ற தொடர் ஹிட் பாடல்கள் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றவர் பின்னணி பாடகர் கிரிஷ். நியூயார்க் பிராட்வே மியூசிக்கல்சின் வால்ட் டிஸ்னியின் பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர் கிரிஷ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடிய இவர், 2009ம் ஆண்டு நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.