Birthday
15 Sep 1954 (Age )
கேரளாவில் பிறந்த பி.வாசுவின் முழுப்பெயர் வாசுதேவன் பீதாம்பரம். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். பல படங்களை தானே எழுதி இயக்கிய வாசு, சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
தனது 19 வது வயதில் டைரக்டர் பி.ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக தனது திரையுல வாழ்க்கையை துவங்கிய பி.வாசு, பல படங்களுக்கு கதையும் எழுதி உள்ளார். 1981ம் ஆண்டு சந்தான பாரதியுடன் இணைந்து பன்னீர் புஷ்பங்கள் படத்தை முதன் முதலில் இயக்கினார். பின்னர் தமிழில் பணக்காரன், சின்னதம்பி, பொன்மன செல்வன், நடிகன், செந்தமிழ் பாட்டு, மன்னன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.