Birthday
08 Sep 1933 (Age )
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. 1933ம் ஆண்டு செப்., 8ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், சங்கிளில் பிறந்தவர். தனது 10வது வயதில் பாடத் தொடங்கியவர் தனது மயக்கும் குரால் இதுவரை சுமார் 1000 படங்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். இந்தி மொழி தவிர்த்து தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, உருது, பஞ்சாபி, ஆங்கிலம், குஜராத்தி, உருது உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகளில் பாடியிருக்கிறார். இவர் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.