சினிமா பின்னணியில் இருந்த வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. 1988ம் ஆண்டு, ஜூலை 23ம் தேதி பிறந்தவர் ரேஷ்மா. இவரது தாத்தா, அப்பா ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தயாரிப்பாளராக இருந்தவர். இதயத்தை திருடாதே, அக்னி நட்சத்திரம் போன்ற படங்களை தயாரித்த பிரசாத் பசுபுலேட்டி இவரது தந்தை. தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு, ஓராண்டு காலம் சர்வதேச விமானங்களில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் சென்னை வந்த ரேஷ்மா, ஆரம்பத்தில் சன் சிங்கர்ஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். பின்னர் வம்சம் டிவி சீரியலில் சுப்ரியா என்ற டாக்டர் கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சின்னத்திரையை விட்டு வௌ்ளித்திரையிலும் கால்பதித்துள்ளார் ரேஷ்மா. புதியவர் லக்ஷ்மண் குமார் இயக்கும் மசாலா படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் கேர்ள்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக ரேஷ்மா கூறுகிறார்.