பிரேம தபசு என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவிற்கு வந்த ரோஜாவை, தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் டைரக்டர் செல்வமணி. தொடர்ந்து தமிழில் இவர் நடித்த சூரியன், மக்களாட்சி, ராசைய்யா, வீரா, ஆயுதபூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்த ரோஜா, இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வந்தவர் அரசு, பாரிஜாதம், காவலன், சகுனி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் அரசியலில் நுழைந்து, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தற்போது எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார்.