Advertisement

ஷாலினி

Birthday
20 Nov 1980 (Age )

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள ஷாலினி, மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாகவும் கொடிகட்டி பறந்தவர். தமிழில் பந்தம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.தொடர்ந்து பிள்ளை நிலா, விடுதலை, சங்கர்குரு, ராஜா சின்ன ரோஜா ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் 1997ம் ஆண்டு விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தார். அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த ஷாலினி, அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பள்ளியில் படிக்கும் போதே பாட்மிண்டனில் அதிக ஆர்வம் கொண்ட ஷாலினி, மாநில அளவிலான போட்டிகளில் பலவற்றிலும் கலந்து கொண்டுள்ளார்.