நடிகையும், மாடலுமான யுக்தா முகி, 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒலிம்பியாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் வேல்ட் பட்டம் பெற்றவர். 2001ம் ஆண்டு தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு இந்தியில் சில படங்களில் ஹீரோயினாகவும், சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.