1980-90 களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின் வலம் வந்தவர் நடிகை ஜெயப்பிரதா. 1962ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணா ராவ், சினிமா படங்களுக்கு பைனான்சியராவார். அம்மா நீலவேனி. பள்ளி ஆண்டு விழாவில் ஜெயப்பிரதாவின் நடனத்தை பார்த்து பூமி கோஷம் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் டான்சராக நடிக்க வைத்தார் அந்தப்படத்தின் இயக்குநர். தொடர்ந்து கே.பாலசந்தர் இயக்கிய மன்மதலீலை படத்தில் நடித்தவர், நினைத்தாலே இனிக்கும் படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1986ம் ஆண்டு தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்.