சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 1990ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா, இங்கு பட்டப்படிப்பு எல்லாம் முடித்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சின்னத்திரையில் மானாட மயிலாடா நிகழ்ச்சியில் பட்டம் வென்று, அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் வௌ்ளித்திரையில் அறிமுகமானார். ஆனால் அதன்பின்னர் அவர் அட்டகத்தி படம் தான் அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.