 
கர்நாடகாவின் மங்களூருவில் பிறந்த அனுஷ்கா, யோகா ஆசிரியையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல பிரபலங்களுக்கும் யோகா பயிற்சி அளித்து வந்த இவருக்கு 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். 2009ம் ஆண்டு இவர் நடித்த அருந்ததி படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. 2006ம் ஆண்டு ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருப்பினும் அருந்ததி படத்தின் வெற்றிக்கு பிறகே தமிழில் தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழில் இவர் நடித்த வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வ திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.