1980ம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கார்த்திக்கின் உண்மையான பெயர் முரளி கார்த்திகேயன் முத்துராமன் ஆகும். 1960ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி சென்னையில் பிறந்த இவர், பழம்பெரும் நடிகர் முத்துராமனின் வாரிசு ஆவார். தமிழிலும், தெலுங்கிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த இவர், ஆங்கில படங்கள் உள்ளிட்ட சில படங்களுக்கு டப்பிங்கும் பேசி உள்ளார். இவரது மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.